"பாணா காத்தாடி' தமிழ்ப் படம்மூலம் சினிமாவுக்குள் என்ட்ரியானவர் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த சமந்தா. "பாணா காத்தாடி'-யைத் தயாரித்த சத்யஜோதி பிலிலிம்ஸ் தியாகராஜனின் மகன் அர்ஜூன், அப்போதே சமந்தாவை சின்சியராக லவ் பண்ணி, கல்யாணம் பண்ணும் முடிவுக்கும் போனார். தியாகராஜனின் கடும் எதிர்ப்பால் லவ் பணால் ஆனது.

Advertisment

samantha

ஆனால் அதன்பின் சமந்தாவின் மார்க்கெட் வளர ஆரம்பித்தது. தெலுங்குக்குப் போனதும் செம ஸ்பீடாக வளர ஆரம்பித்தார் சமந்தா.

Advertisment

arjunஅதன்பின்தான் தமிழில் தனுஷ், விஜய், என பெரிய ஹீரோக்களுடன் ஜோடிபோட ஆரம்பித்தார். தெலுங்கில் ஒரே ஒரு படத்தில் சேர்ந்து நடித்த நாகசைதன்யாவுடன் லவ் கிசுகிசுவில் சிக்கினார் சமந்தா. "சம்சாரம்னு ஒருத்தி வந்தா அது சமந்தாவாகத்தான் இருக்கணும்' என்கிற ரேஞ்சுக்கு போனார் நாகசைதன்யா.

அப்பா நாகார்ஜூனா- அம்மா அமலாவுக்கு நாகசைதன்யா- சமந்தா திருமணத்தில் விருப்பமில்லை என்றாலும் அரைகுறை மனதுடன் சம்மதித்தனர். திருமணத்திற்குப்பின் சமந்தா நடிப்பதில் நாகார்ஜுனாவுக்கு துளியும் விருப்பமில்லை. ஆனால் சமந்தாவோ, நாகசைதன்யாவை சரிக்கட்டி, நடிப்பதற்கு சம்மதம் வாங்கிவிட்டார்.

Advertisment

""வீட்ல இருப்பதற்கு விருப்பமேயில்லை. ஷூட்டிங் ஸ்பாட்லதான் என்ன ஒரு மகிழ்ச்சி'' என ஓப்பனாக சொல்ல ஆரம்பித்த சமந்தா, "ரங்கஸ்தலம்' என்ற தெலுங்குப் படத்தில் ஆற்றங்கரையில் தொடை தெரியும் அளவுக்கு பாவாடையைத் தூக்கியபடி நிற்கும் ஸ்டில்லைப் பார்த்ததும் பகீர் ஆகிவிட்டார்கள் நாகார்ஜுனனும் நாகசைதன்யாவும். ஆனால் படத்திலோ ஹீரோ ராம்சரணுடன் லிலிப்லாக் கிஸ் சீனில் சமந்தா சும்மா புகுந்து விளையாடியிருந்ததைப் பார்த்ததும் ரொம்பவே டென்ஷனாகிவிட்டார் நாகார்ஜூனா. வெந்த புண்ணில் ஆசிட்டை ஊத்துன மாதிரி, ""இந்த சீனையெல்லாம் பார்த்துட்டு என் மாமனார் தப்பா நினைக்கவே மாட்டாரு''ன்னு ஒரே போடா போட்டாரு சமந்தா.

இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என செம பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் சமந்தா. தனிமையில் தவித்துக் கொண்டிருக்கிறார் நாகசைதன்யா. சீக்கிரமே டைவர்ஸ் சேதிவரும் என்கிறார்கள் தெலுங்கு சினிமா புள்ளிகள்.

-பரமேஷ்