Advertisment

சாய்பல்லவியும் சூர்யாவும்!

/idhalgal/cinikkuttu/saipalavi-and-surya

சாய்பல்லவி

""இப்படத்தின் படப் பிடிப்பு முடிந்ததும் பள்ளி மாணவிபோல உணர்ந்தேன். நான் எப்போதும் படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பே என்னைத் தயார் படுத்திக்கொண்டுதான் செல்வேன். ஆனால் இப் படத்தில் நான் தயார் படுத்திக்கொள்வது தேவை இல்லை என்று உணர்ந்தேன். இப்படத்தில் நான் என்ன பெரிதாக கற்றுக்கொள்ள போகிறேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் செல்வ

சாய்பல்லவி

""இப்படத்தின் படப் பிடிப்பு முடிந்ததும் பள்ளி மாணவிபோல உணர்ந்தேன். நான் எப்போதும் படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பே என்னைத் தயார் படுத்திக்கொண்டுதான் செல்வேன். ஆனால் இப் படத்தில் நான் தயார் படுத்திக்கொள்வது தேவை இல்லை என்று உணர்ந்தேன். இப்படத்தில் நான் என்ன பெரிதாக கற்றுக்கொள்ள போகிறேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் செல்வ ராகவன்மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு நடிகருக்குள்ளும் இருக்கும் திறமையை வெளிக்கொண்டுவருவதில் செல்வராகவன் வல்லவர். சூர்யாவுடன் இணைந்து நடித்ததில் அவரிடமிருந்தும் நிறைய கற்றுக்கொண்டேன்'' என்றார்.

Advertisment

s

சூர்யா

""அரசியல், ரத்தம் சிந்தாத யுத்தம். யுத்தம், ரத்தம் சிந்தும் அரசியல். செல்வராகவன் "என்.ஜி.கே.' புதுப் படத்திற்கு செல்வதுபோல இருந்தது. செல்வராகவன் இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் சரி, நுணுக்கமாகப் பார்த்துப் பார்த்து செய்வார். அவருடைய இயக்கத்திலும், எழுத்திலும் எனக்கு தீராத காதல் உண்டு. செல்வாவின் இயக்கத்தில் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறேன்.

யுவனின் இசையைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவருடைய இசை காலத்தைக் கடந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. காரில் பயணம் செய்யும்போது அவரின் பாடல் கேட்டு போனில் தொடர்புகொண்டு "உன் கையைக் காட்டு முத்தமிடுகிறேன்' என்று கூறியிருக்கிறேன். செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி அன்யோன்மான கணவன்- மனைவிபோல இருக்கும்.

Advertisment

sr

சாய்பல்லவி ஒவ்வொரு காட்சி முடிந்தபிறகும் "நான் நன்றாக நடித்திருக்கிறேனா?' என்று கேட்டு மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்தார்.

என்னுடைய சினிமா வாழ்க்கையில் இப்படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும். இப் படத்தின் டப்பிங் பேசி முடித்து விட்டேன். செல்வராகவனுக்கு ஒரு கோரிக்கை, அடுத்த படம் எடுக்கும்போது என்னை வைத்து எடுங்கள்'' என்றார்.

"நந்தகோபால குமரன்' என்.ஜி.கே. படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் சாய் பல்லவியும் சூர்யாவும் இப்படிப் பேசினார்கள்.

cine140519
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe