Advertisment

சாகடிக்கும் தியேட்டர் ஓனர்கள்! -வேதனையில் வெடிக்கும் தயாரிப்பாளர்!

/idhalgal/cinikkuttu/sagittarius-theater-owners-explosive-producer-pain

சுரேஷ் காமாட்சி தயாரித்து டைரக்ட் பண்ணிய படம் "மிக மிக அவசரம்.' தமிழச்சியான ஸ்ரீபிரியங்கா போலீஸ் கான்ஸ்டபிளாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி யிருந்தார். இப்படத்தை வாங்கி கடந்த அக். 11-ஆம் தேதி வெளியிட நினைத்த வர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன். படத்தின் பத்திரிகையாளர் காட்சியும் கடந்த 8-ஆம் தேதி போடப்பட்டு, சில பத்திரிகைகளில் விமர்சனமும் வெளிவந்துவிட்டது. கடந்த "சினிக்கூத்து' இதழிலும் விமர்சனம் எழுதியிருந்தோம்.

Advertisment

ஆனால்,

சுரேஷ் காமாட்சி தயாரித்து டைரக்ட் பண்ணிய படம் "மிக மிக அவசரம்.' தமிழச்சியான ஸ்ரீபிரியங்கா போலீஸ் கான்ஸ்டபிளாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி யிருந்தார். இப்படத்தை வாங்கி கடந்த அக். 11-ஆம் தேதி வெளியிட நினைத்த வர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன். படத்தின் பத்திரிகையாளர் காட்சியும் கடந்த 8-ஆம் தேதி போடப்பட்டு, சில பத்திரிகைகளில் விமர்சனமும் வெளிவந்துவிட்டது. கடந்த "சினிக்கூத்து' இதழிலும் விமர்சனம் எழுதியிருந்தோம்.

Advertisment

ஆனால், தியேட்டர் ஓனர் களோ சந்திரசேகரனின் நினைப்பில் மண் அள்ளிப் போட்டுவிட்டனர். என்னதான் நடந்தது என ரவீந்தர் சந்திரசேகரனிடம் கேட்டோம். ""பெரிய ஹீரோக்களின் படங்களை மட்டுமல்ல; நல்ல கதையம்சம்கொண்ட பல சின்ன பட்ஜெட் படங்களையும் வாங்கி ரிலீஸ் பண்ணிவருகிறேன்.

pp

அந்தவகையில்தான் மிக நல்ல கதையம்சம் கொண்ட "மிக மிக அவசரம்' படத்தை சுரேஷ் காமாட்சியிடமிருந்து வாங்கி, அக். 11-ஆம் தேதி ரிலீஸ் பண்ணும் முடிவுடன் 85 லட்ச ரூபாய் செலவு செய்தேன்.

Advertisment

அக். 11 ரிலீஸ் என செப். 20-ஆம் தேதியே கவுன்சிலிலும் அதிகாரப்பூர்வமாக சொல்லிவிட்டேன். ஆனால், அக். 10-ஆம் தேதி தியேட்டர் ஓனர்கள் தரப்பிலிருந்து எனக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் வந்தது. அதாவது, "மிக மிக அவசரம்' படத்திற்கு தமிழகம் முழுக்க 17 தியேட்டர்கள்தான். அதிலும் மொத்தம் 34 ஷோக்கள்தான் ஒதுக்கமுடியும்' என்ற குண்டைத்தூக்கிப் போட்டார்கள். விஜயா புரொடக்ஷன் தயாரிபில் விஜய் சேதுபதி நடித்துள்ள "சங்கத் தமிழன்' படத்தையும் நான்தான் ரிலீஸ் செய்கிறேன்.

ppp

இப்போது தியேட்டர் காரர்கள் பண்ணிய காரியத்தால், நான் வாங்கியிருந்த சின்ன பட்ஜெட் படங்களை அவர்களிடமே திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு நிலை ஆகிவிட்டது. பணத்தை எப்படி வேணும்னா லும் சம்பாதிக்கலாம். ஆனா தரமான படங்களை ரிலீஸ் பண்ணி நல்ல பேரைச் சம்பாதிக்க நினைக்கும் எனக்கு ஏற்பட்ட கதி யாருக்கும் வரக்கூடாது'' என வேதனையில் வெடித்தார் ரவீந்தர் சந்திரசேகரன்.

தியேட்டர் காரர்களின் இந்த அடாவடியை பாரதிராஜாவும் கடுமையாக கண்டித்துள்ளதுடன், ""தியேட்டர் உரிமையாளர்கள் இதேபோக்கைத் தொடர்ந்தால், தயாரிப்பாளர்கள் அனைவரும் இணைந்து தக்க நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்'' என சினம்கொண்டு சீறியிருக்கிறார்.

தமிழச்சியான தனக்கு தமிழ் சினிமாவில் சரியான வாய்ப்பு அமையவில்லை என அடிக்கடி புலம்பிவரும் ஹீரோயின் ஸ்ரீபிரியங்காவை மேலும் அதிகமாகப் புலம்பவிட்டிருக்கிறார்கள் தியேட்டர் ஓனர்கள்.

லாஸ்ட் புல்லட்டின்: இப்போதைய நிலவரப்படி நவ. 8-ல் "மிகமிக அவசரம்' ரிலீஸ் என சேதி வந்திருக்கு.

cini291019
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe