Advertisment

ஸ்ருதியின் சோக கீதம்!

/idhalgal/cinikkuttu/sad-song-sruthi

டிப்புக்கு இணையாக இசைக்கும் அதிக முக்கியத் துவம் கொடுப்பவர் நடிகை ஸ்ருதி ஹாசன். அதனால்தான் என்னமோ லண்டனைச் சேர்ந்த இசையமைப்பாளரும், தியேட்டர் நடிகருமான மைக்கேல் கார்சல்மீது காதல் வயப்பட்டார். இதைத் தனது தந்தை கமல்ஹாசனிடம் தெரியப்படுத்தி அனுமதி யும் வாங்கினார். அதோடு, சென்னைக் குக் கூட்டிவந்து தந்தையிடமும், மும்பையில் தாயார் சரிகாவிடமும் கார்சலை அறிமு

டிப்புக்கு இணையாக இசைக்கும் அதிக முக்கியத் துவம் கொடுப்பவர் நடிகை ஸ்ருதி ஹாசன். அதனால்தான் என்னமோ லண்டனைச் சேர்ந்த இசையமைப்பாளரும், தியேட்டர் நடிகருமான மைக்கேல் கார்சல்மீது காதல் வயப்பட்டார். இதைத் தனது தந்தை கமல்ஹாசனிடம் தெரியப்படுத்தி அனுமதி யும் வாங்கினார். அதோடு, சென்னைக் குக் கூட்டிவந்து தந்தையிடமும், மும்பையில் தாயார் சரிகாவிடமும் கார்சலை அறிமுகம் செய்துவைத்தார். சில மாதங்கள் உற்சாகமாகக் காதலித்து ஊர்சுற்றிய இந்த ஜோடிக்கு மத்தியில் திடீரென விரிசல் விழுந்தது.

Advertisment

தங்களது காதல் முறிந்துபோனது என்பதை அறிவிப்பாக வெளியிட்ட ஸ்ருதி ""புதிய அத்தியாயம் தொடங்கு கிறது'' என்று பதிவிட்டார். அதை உறுதி செய்யும் விதமாக ""புதிய பாதையில் பயணிக்கவுள்ளோம்'' என்று பதிவிட்டார் மைக்கேல் கார்சல். இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், எந்த அசைவுகளும் தெரியாதவாறு அமைதியாகவே இருந்தார் நடிகை ஸ்ருதி.

Advertisment

ss

இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த விழா ஒன்றில், காதல் முறிந்ததற்கான காரணம்பற்றிக் கேள்வி கேட்டபோது, ""காதலுக்கென்று பிரத்யேகமான விதி ஒன்றும் கிடையாது. நல்லவர்கள் சில சமயங்களில் நல்லவர்களாக நடந்து கொள்கிறார்கள். அவர்களே சில நேரங்களில் தப்பானவர் களாகவும் இருக்கிறார்கள். காதல் முறிந்து போனதால் எனக்கு எந்த வேதனையும் இல்லை. மொத்தத்தில் அதுவொரு நல்ல அனுபவம். அதன்வழியாக நிறைய கற்றுக்கொண்டேன். அடுத்து ஒரு சிறந்த காதலுக்காக காத்துக் கிடக்கிறேன். கைகூடினால் மகிழ்ச்சி யாக அறிவிக்கிறேன்'' என்று பதிலளித்தார்.

மேலும் பேசிய அவர், ""நான் ஒரு விஸ்கி லவ்வராக இருந்தேன். இப்போது அதையெல்லாம் விட்டு விட்டேன். எனது உடல்நலம் ரொம்பவே கெட்டுப்போனது. முறையான சிகிச்சை எடுத்து அதிலிருந்து இப்போது மீண்டுவிட்டேன்'' என்று தெரிவித்தார். அதற்கு சாட்சியமாக வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளையும், தமிழ், இந்தியில் படங்களுக்கும் கமிட் ஆகியிருக்கிறார். அதேபோல், அமெரிக்காவின் பிரபல சீரியலான டிரெஸ்டோனிலும் நடித்துவருகிறார்.

இப்போதும் இசைக்குதான் முன்னுரிமை என்கிறார் ஸ்ருதி.

cini291019
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe