Advertisment

எஸ். ஜானகியின் பெருந்தன்மை!

/idhalgal/cinikkuttu/s-janakis-generosity

முற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகிவரும் படம் "பண்ணாடி.' இப்படத்தை டி.ஆர். பழனிவேலன் இயக்கி வருகிறார். பார்த்தசாரதி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் ராமலிங்கம் இசையமைத்துள்ளார்.

Advertisment

janakiஇயக்குநர் பழனிவேலன் கூறியபோது...

""நம்மை யார் என்று நமக்கு சொல்லவரும

முற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகிவரும் படம் "பண்ணாடி.' இப்படத்தை டி.ஆர். பழனிவேலன் இயக்கி வருகிறார். பார்த்தசாரதி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் ராமலிங்கம் இசையமைத்துள்ளார்.

Advertisment

janakiஇயக்குநர் பழனிவேலன் கூறியபோது...

""நம்மை யார் என்று நமக்கு சொல்லவரும் கதைக்களம்தான் "பண்ணாடி.' இது கிராமத்துப் பின் புலத்தில் உருவாகிறது. முற்றிலும் புதிய களத்தில் ஆர்.வி. உதய குமார், வேல ராமமூர்த்தி, முக்கிய கதாபாத்திரத்தில் பிரபலமான நட்சத்திரங்கள் புதுமுக நடிகர் களின் பங்கேற்பில் இதுவரை திரை காணா யதார்த்த பாத்திரங் களின் உணர்வுகளில் இப்படம் உருவாகிறது'' என்றார்.

Advertisment

இசையமைப்பாளர் ராஜேஷ் ராமலிங்கம் கூறியபோது...

""இப்படத்தில் வரும் ஒரு பாடல் மகிழ்ச்சி, துயரம் என இரு வேறு வடிவங்களில் இருக்க வேண்டும் இதற்கு நான் ஜானகி யம்மாவைப் பாட வைப்பதை ஒரு கனவுபோல எண்ணியிருந்தேன். நாங்கள் ஜானகி அம்மாவிடம் நீங்கள்தான் பாடவேண்டுபென்று கேட்டபோது, ""நீங்கள் வேறு யாராவது புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்களேன். என்னை விட்டுவிடுங்கள்'' என்றார். நாங்கள் விடாமல் நச்சரித்தோம். ஒரு கட்டத்தில் எங்கள் தொல்லை தாங்காமல் ""என்ன வரிகள்'' என்றார். நான், ""ஒன் உசிரு காத்துல காத்தாடியா பறக்குறேன்'' என முதல்வரியைச் சொன்னேன். புன்முறுவல் செய்தார். அப்பாடா என்றிருந்தது. இரண்டு பாடல்களையும் ஒரே டேக்கில் பாடிக் கொடுத்தார். அத்துடன் படக்குழுவையும் வாழ்த்தினார்.'' என்றார்.

இப்படத்தை ஸ்ரீ அய்யனாரப்பா பிலிம்ஸ் சார்பில் ரேவதி பழநிவேலன் தயாரிக்கிறார்.

cine251218
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe