Advertisment

ஓடிப்போன நடிகையும்! ஓயாத வாடையும்!

/idhalgal/cinikkuttu/running-actress

டன் படித்த 50 நண்பர்களின் பணமுதலீட்டில் தயாரான படம் பி ஸ்டார் புரடக்‌ஷன்ஸின் "நெடுநல்வாடை.' சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இப்படம் மார்ச் 15 அன்று ரிலீஸாகிறது. பிரபல தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் பி. மதன் இப்படத்தை ரிலீஸ் செய்ய உதவியிருக்கிறார்.

Advertisment

actress

6-ஆம் தேதி பிரசாத் லேப்பில் நடந்த இப்பட டிரைலர் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் மதன், இணை தயாரிப்பாளர் ஜேம்ஸ் மற்றும் ப

டன் படித்த 50 நண்பர்களின் பணமுதலீட்டில் தயாரான படம் பி ஸ்டார் புரடக்‌ஷன்ஸின் "நெடுநல்வாடை.' சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இப்படம் மார்ச் 15 அன்று ரிலீஸாகிறது. பிரபல தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் பி. மதன் இப்படத்தை ரிலீஸ் செய்ய உதவியிருக்கிறார்.

Advertisment

actress

6-ஆம் தேதி பிரசாத் லேப்பில் நடந்த இப்பட டிரைலர் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் மதன், இணை தயாரிப்பாளர் ஜேம்ஸ் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தமிழில் படங்களுக்கு தலைப்பு வைக்கவேண்டிய அவசியம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து பேசிய காணொளியில் டைரக்டர் செல்வக்கண்ணன் பற்றி பூரிப்புடன் பேசினார்.

Advertisment

actress

50 தயாரிப்பாளர்களின் சார்பில் பேசிய சுந்தர், படத்தில் ஒரு வாரம் நடித்துவிட்டு நடிகர் அபிசரவணனுடன் ஓடிப்போன அதிதி மேனன் குறித்த பஞ்சாயத்துகளை மேடையிலேயே போட்டு உடைத்தார். ""படம் எடுக்க முன்வந்தபோது நாங்கள் நினைத்த பட்ஜெட்டைவிட பல மடங்கு தாண்டிவிட்டது. ஆனாலும் நண்பர் செல்வக்கண்ணன் எவ்வளவு நேர்மையானவர் என்பது எங்களுக்குத் தெரியும் என்பதால், எதையும் actressபொருட்படுத்தாமல் நாங்கள் தொடர்ந்து செலவுசெய்து இப்படத்தை முடித்தோம். இப்போதும்கூட இந்தப் படத்திலிருந்து ஒரு பைசாகூட திரும்பி வராவிட்டாலும் இயக்குநர்மீது எங்களுக்கு இருக்கும் பிரியங்களும் நட்பும் அப்படியே இருக்கும்'' என்றார்.

எஸ்கேப் ஆர்டிஸ்டிட் மதன் பேசும்போது, ""இன்றைய தேதியில் நண்பர்கள் இப்படி ஒரு காரியத்தில் இறங்கியிருப்பது வியப்பளிப்பதாக இருக்கிறது'' என்றார்.

நன்றி உரையாற்றிய இயக்குநர் செல்வக்கண்ணன், ""இந்தப் படம் எத்தனையோ முறை டிராப் ஆகவேண்டியது. ஆனால் நடந்த உண்மைகள் எதையும் மறைக் காமல், பிரச்சினைகள் அத்தûயை யும் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிக்கொண்டே இருந்தேன். அவர்களுக்கு பிராக்டிக்கலான சினிமா குறித்து எதுவுமே தெரியா தென்றாலும், நான் பொய் சொல்லவில்லை என்ற ஒரே காரணத்துக்காக தொடர்ந்து உதவி படத்தை முடிக்க உதவினார்கள். நல்ல படங்களை ரசிகர்கள் ஒருநாளும் கைவிட்டதில்லை என்ற நம்பிக்கையில், மிகவும் தரமான ஒரு படத்தை நல்ல டெக்னீஷியன்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கி றேன். "நெடுநல்வாடை' லோபட்ஜெட். டெக்னீஷியன் களின் ஹைவோல்டேஜ் படம்'' என்றார்.

பூ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி, ஐந்து கோவிலான், செந்தி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இசை: ஜோஸ் ஃபிராங்க்ளின், ஒளிப்பதிவு: வினோத் ரத்தினசாமி, பாடல்கள்: கவிப்பேரரசு வைரமுத்து, படத்தொகுப்பு: மு.காசிவிஸ்வநாதன், கலை: விஜய் தென்னரசு, சண்டை பயிற்சி: ராம்போ விமல், நடனம்: தினா, சதீஷ்போஸ், மக்கள் தொடர்பு: மணவை புவன்.

cine190319
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe