Advertisment

ருத்ரதாண்டவ சிவன்!

/idhalgal/cinikkuttu/rudrathana-shiva

னுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை', "காதல் கொண்டேன்', "யாரடி நீ மோகினி', "திருவிளையாடல் ஆரம்பம்', "3' ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே. புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் "பாண்டிமுனி' படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் என்ற ஊரில் நடை பெற்றது.

Advertisment

kasturiraja

முனீஸ்வரசாமி என்ற அகோரி வேடத்த

னுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை', "காதல் கொண்டேன்', "யாரடி நீ மோகினி', "திருவிளையாடல் ஆரம்பம்', "3' ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே. புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் "பாண்டிமுனி' படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் என்ற ஊரில் நடை பெற்றது.

Advertisment

kasturiraja

முனீஸ்வரசாமி என்ற அகோரி வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கிறார்.

மேகாலி, ஜோதி, வைஷ்ணவி ஆகிய மூவரும் நாயகிகளாக அறிமுகமாகிறார்கள்.

முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே, சிவசங்கர், சுமன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு- மது அம்பட், இசை- ஸ்ரீகாந்த்தேவா, நடனம்- சிவசங்கர், சண்டைப் பயிற்சி- சூப்பர் சுப்பராயன், எடிட்டிங்- சுரேஷ் அர்ஸ், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கஸ்தூரி ராஜா. படம் பற்றியும் படப்பிடிப்பு பற்றியும் அவரிடம் கேட்டோம்..

Advertisment

"திருவண்ணாமலை அருகே வேட்டவலம் ஜமீனுக்குச் சொந்தமான குளம் ஒன்றுள்ளது. ஐந்து ஏக்கர் பரப்பில் பாறைகள் நிறைந்த இடத்துக்கு நடுவே அந்தக் குளம் இருக்கிறது.

அந்தக் குளத்தில் சுமார் 4,000 சதுர அடி அளவுக்கு இரும்புத்தூண்கள் இரும்புப் பலகைகளைக் கொண்ட அரங்கு ஒன்று அமைக்கப்பட்டது.

kasturirajaஅதன்மீது அமர்ந்து அகோரி வேடத்தில் ஜாக்கி ஷெராப் மற்றும் 400 அகோரிகள் பூஜை செய்வது போன்ற காட்சிகளை மிகப்பிரம்மாண்டமான முறையில் படமாக்கினோம்.

அத்துடன் 25 அடி உயரமுள்ள சிவன் சிலை ருத்ரதாண்டவக் கோலத்தில் உருவாக்கப்பட்டு படமாக்கப்பட்டது. இரண்டு மலைகளுக்கிடையே தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. அதில் அகோரிகள் வலம்வருவது மாதிரியான காட்சிகளும் படமாக்கப்பட்டன.

கயிலாயத்தைப் பிரதி எடுத் தது மாதிரியான இந்த அரங்குகள் திரையில் பிரமிப்பை ஏற்படுத்தும். இதற்காக சுமார் 50 லட்சம் ரூபாயை செலவு செய்திருக்கிறோம்.

என் சினிமாப் பயணத்தில் "பாண்டிமுனி' படம் வித்தியாசமான அனுபவத்தை எனக்குத் தந்திருக்கிறது'' என்றார் கஸ்தூரிராஜா.

cin301018
இதையும் படியுங்கள்
Subscribe