Advertisment

சின்னத்திரை சங்கதிகள்! : "ரோஜா'வின் ரோதனை!

/idhalgal/cinikkuttu/roses-test

ன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் "ரோஜா' சீரியலை இப்போது டைரக்ட் பண்ணிவருபவர் சதாசிவம். சீரியல் ஆரம்பித்தபோது இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான "ரோஜா'-வை பிரைம் டைமான இரவு 7 மணிக்கு மாற்றியது சன் டி.வி. அப்படி பிரைம் டைமிற்கு மாற்றியதால் என்ன செய்வது, சீரியலை எப்படிக்கொண்டு போவது எனத் தெரியாமல் டைரக்டருக்கு முழி பிதுங்குது போல.

Advertisment

aa

போன வாரம் ஃபுல்லா "ரோஜா'-வின் ரோதனை தாங்கமுடியல. ஒரு

ன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் "ரோஜா' சீரியலை இப்போது டைரக்ட் பண்ணிவருபவர் சதாசிவம். சீரியல் ஆரம்பித்தபோது இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான "ரோஜா'-வை பிரைம் டைமான இரவு 7 மணிக்கு மாற்றியது சன் டி.வி. அப்படி பிரைம் டைமிற்கு மாற்றியதால் என்ன செய்வது, சீரியலை எப்படிக்கொண்டு போவது எனத் தெரியாமல் டைரக்டருக்கு முழி பிதுங்குது போல.

Advertisment

aa

போன வாரம் ஃபுல்லா "ரோஜா'-வின் ரோதனை தாங்கமுடியல. ஒரு வெடி விபத்தில் ரோஜாவாக நடிக்கும் பிரியங்காவிற்கு கண் பார்வை பறிபோகிறது. இதுபோதாதா, வில்லியாக நடிக்கும் அனுவிற்கு? "அப்பாடா இப்பத்தான் சந்தோஷமா இருக்கு' என துள்ளிக் குதிக்கிறார் அனு. அத்தோடு விட்டாலும் பரவாயில்லை. ரோஜாவுக்கு மீண்டும் கண்பார்வை கிடைத்து விடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதிக்கிறார் அனு.

கண் சிகிச்சை அளிக்கவரும் டாக்டரைக் கடத்திக்கொண்டு போய்விடுகிறார்.

இனிமேல் என்ன செய்வது, எப்படி சிகிச்சை அளிப்பது என கலங்குகி றார்கள் ரோஜாவின் கணவரும் மாமியாரும். இப்படியே போனால் சரிப்பட்டு வராது என முடிவுபண்ணி, அமுதநாயகி அம்மன் கோவிலில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி ஆசிரமத்தில் ரோஜாவுடன் தங்கிவிடுகிறார்கள் கணவரும் மாமியாரும்.

Advertisment

சிலபல பரிகாரங்கள் செய்தால் ரோஜாவுக்கு கண்பார்வை கிடைத்துவிடும் என ஆசிரமத் தலைவி சொல்லியதால், வரிசையாக பரிகாரம், பூஜை என ஆரம்பிக்கிறார் கணவரான சிபு. முள் செருப்பு போட்டு நடக்கிறார், அங்கப் பிரதட்சணம் செய்கிறார்.

roja

அக்னி விளக்கை கைகளில் ஏந்தி கோவிலைச் சுற்றுகிறார்.

இதெல்லாம் வில்லி அனுவுக்கு தெரிகிறது.

பரிகாரமா பண்றே பரிகாரம், இதோ வந்துட்டேன் என அமுதநாயகி அம்மன் கோவிலுக்கு வந்திறங்குகிறார் கள் அனுவும் அவரது அம்மாவும். இப்பத்தான் பெருத்த ரோதனையே ஆரம்பமாகுது. பல பரிகாரங்களுக்குப்பின் முள் படுக்கை பரிகாரத்திற்கும் தயாராகிறார் சிபு. "அய்யய்யோ ரோஜா வுக்கு பார்வை வந்துரும் போலயே' என பதறும் அனு, முள்படுக்கையில் விஷத்தைத் தடவி (கண்ணாடியைத் திருப்புனா எப்படிய்யா ஆட்டோ ஓடும்) சிபுவை காலி செய்யத் திட்டமிடுகிறார் அனு.

roja

ரோஜாவின் மொத்த எபிசோடும் முடியும்வரை ஹீரோ சிபு உயிரோடுதான் இருப்பார்னு நமக்குத் தெரியும். அதுக்காக முள்படுக்கையில விஷம் தடவும் அளவுக்கு யோசிப்பீகளா டைரக்டர் சார்?

-பரமு

cini241219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe