Advertisment
/idhalgal/cinikkuttu/room

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ், அஸ்வின் கே.வின் மார்ச் 30 நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் "ரூம்'. பார்த்திபன் நடித்த "அம்முவாகிய நான்', "நேற்று இன்று' ஆகிய படங்களை இயக்கிய பத்மாமகன் "ரூம்' படத்தை இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொ

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ், அஸ்வின் கே.வின் மார்ச் 30 நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் "ரூம்'. பார்த்திபன் நடித்த "அம்முவாகிய நான்', "நேற்று இன்று' ஆகிய படங்களை இயக்கிய பத்மாமகன் "ரூம்' படத்தை இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் "ரூம்' தயாராகிறது.

Advertisment

room

தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த அபிஷேக் வர்மா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார். இவர் "அவள் பெயர் தமிழரசி', "நீர்ப்பறவை', "வீரம்' ஆகிய படங்களில் நடித்தவர்.

""படத்தின் ஹைலைட்டான அம்சமே பெரும்பகுதிக் காட்சிகள் ஒரு பாத்ரூமுக்குள் நிகழ்வதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதுதான்.. அந்த வகையில் படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி வித்தியாசமான, தமிழ் சினிமாவில் இதுவரை மேற்கொள்ளப்படாத ஒரு முயற்சியாக- திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியமான அனுபவமாக இருக்கும்'' என்கிறார் பத்மாமகன்.

பிரபல ஒளிப்பதிவாளர் எம்.எஸ். பிரபு படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, இசையமைக்கிறார் வினோத் யஜமான்யா. இவர் தெலுங்கில் கிட்டத்தட்ட 300 படங்களுக்குப் பின்னணி இசை யமைத்துள்ளார்.

"குற்றம் கடிதல்', "ஹவுஸ் ஓனர்' என இந்தியன் பனோரமாவில் திரை யிடப்பட்ட முக்கியமான படங்களுக்குப் படத்தொகுப்பு செய்த சி.எஸ்.பிரேம் "ரூம்' படத்தை எடிட் செய்கிறார். படப் பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.

cini051119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe