Advertisment

ஆர்.கே.செல்வமணியின் ஜிங் ஜாங்!

/idhalgal/cinikkuttu/rk-selvamanis-jing-zhang

24 சினிமா தொழிற்சங்கங் களையும் உள்ளடக்கிய ஃபெப்சியின் தலைவராகவும், சினிமா இயக்குநர் களின் சங்கத் தலைவராகவும் இருப்பவர் ஆர்.கே. செல்வமணி. சென்னை பையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கு வீடுகட்டவும், ஸ்டூடியோ கட்டிக் கொள்ளவும் ஏக்கர் கணக்கில் நிலம் ஒதுக்கி

Advertisment

னார் அப்ப

24 சினிமா தொழிற்சங்கங் களையும் உள்ளடக்கிய ஃபெப்சியின் தலைவராகவும், சினிமா இயக்குநர் களின் சங்கத் தலைவராகவும் இருப்பவர் ஆர்.கே. செல்வமணி. சென்னை பையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கு வீடுகட்டவும், ஸ்டூடியோ கட்டிக் கொள்ளவும் ஏக்கர் கணக்கில் நிலம் ஒதுக்கி

Advertisment

னார் அப்போது முதல்வராக இருந்த கலைஞர். ஆர்.கே. செல்வமணி வீடு கட்டினாரோ, இல்லையோ- பிரம்மாண்ட ஸ்டூடியோ ஒன்றைக்கட்டி, அதற்கு எம்.ஜி.ஆர்.பெயரையும் வைத்து, முதல்வர் எடப்பாடியை வைத்து திறப்பு விழா நடத்தினார்.

rr

ஸ்டூடியோவில் இன்னொரு தளம் கட்ட ஐந்து கோடி அரசு நிதியை ஒதுக் கிய எடப்பாடி, முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய்க் கான காசோலையை சமீபத்தில் தலை மைச் செயலகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி யில் ஆர்.கே. செல்வமணியிடம் வழங்கினார்.

காசோலையை வாங்கியபின் ஃபெப்சி அலுவலகத்தில் நடந்த பிரஸ்மீட்டில், ""எஸ்.ஏ. சந்திரசேகரன் டைரக்ஷனில், ஜெய்- அதுல்யா ரவி, வைபவி நடிக்கும் "கேப்மாரி' என்ற படம் தயாராகியுள்ளது. அதைச் சுருக்கமாக "சி.எம்.' என்கிறார் எஸ்.ஏ.சி. இது முதல்வரை இழிவுபடுத்து வதாக உள்ளது'' என கொளுத்திப் போட்டுள்ளார்.

""அந்தப் படத்தைப் பற்றி மூன்று மாதங் களுக்குமுன்பே பிரஸ்மீட்டில் சொல்லிவிட்டார் எஸ்.ஏ.சி. அந்த பிரஸ்மீட்டில் வைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ்களில் "சி.எம்.' என்றுதான் இருந்தது. ஆனால், ஆர்.கே. செல்வமணியோ இப்போது ஒரு கோடி ரூபாயை வாங்கியபிறகு திடீரென புயலைக் கிளப்புகிறார். அவருக்கு ஏன் இந்த ஜிங்ஜாங் வேலை? இந்த ஆட்சிமாறும் என்பது ஆர்.கே. செல்வமணிக்கு தெரியாதா'' என்கிறார்கள் டைரக்டர்கள் சிலர்.

-பவர் பரசு

cini011019
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe