பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை "காமராஜ்' என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை "எம்.ஜி.ஆர்' என்னும் பெயரில் திரைப்படமாகத் தயாரித்துவருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rithivika.jpg)
பிரபல விளம்பரப்பட நாயகன் சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஆர். ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்துலுவாக ஒய்.ஜி. மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடகக் கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர்த்தொண்டனாக வையாபுரி ஆகியோர் நடிக்கிறனர்.
விரைவில் துவங்கவிருக்கும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவாக நடிகை ரித்விகா நடிக்க இருக்கிறார்.
ஏ.எம். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை, வசனம் எழுத, எஸ்.பி. அகமது படத்தொகுப்பு செய்கிறார்.
"எம்.ஜி.ஆர்.' படத்தை அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் வேணுகோபால் அண்டர் டேக் பண்ணியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-09/rithivika-t.jpg)