Advertisment

சந்தோஷத்தில் கலவரம் -டைரக்டர் ஃபீலிங்!

/idhalgal/cinikkuttu/riot-happiness-director-feeling

முற்றிலும் புதியவர்களின் முயற்சியில் உருவாகி நவம்பர் 2 -ல் வெளிவருகிறது "சந்தோஷத்தில் கலவரம்.' இப்படம் எப்படி என்பதைப் பற்றி படத்தின் இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசும்போது, ""எவ்வளவோ வேலைவாய்ப்பு, வரும

முற்றிலும் புதியவர்களின் முயற்சியில் உருவாகி நவம்பர் 2 -ல் வெளிவருகிறது "சந்தோஷத்தில் கலவரம்.' இப்படம் எப்படி என்பதைப் பற்றி படத்தின் இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசும்போது, ""எவ்வளவோ வேலைவாய்ப்பு, வருமானம் எல்லாவற்றையும் இழந்துவிட்டு, துறந்துவிட்டுத்தான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். எனக்கு சினிமாமீது அவ்வளவு காதல். இந்தப் படத்தைப் பல போராட்டங்களைச் சந்தித்துதான் எடுத்தேன்.

Advertisment

director

ஆனால் படம் எடுத்ததைவிட வெளியிடுவதையே மிகவும் சிரமமாக உணர்ந்தேன். கடைசியில் நானே வெளியிடுவது என்று முடிவு செய்தேன். வெளியிடுகிறேன். இந்தப் படம் காதல், நட்பு, நகைச்சுவை, .ஆக்ஷன், ஹாரர், த்ரில்லர் என்று எல்லாமும் கலந்த ஒன்று.

இந்த உலகம் இருவேறு சக்திகளால் இணைந்தது. பாசிடிவ் சக்திக்கும், நெகடிவ் சக்திக்கும் இடையே தினமும் போர் நடக்கிறது. இது ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொருவருக்குள்ளும் நடைபெறுகிறது.

Advertisment

இந்த உலகிலுள்ள பாசிடிவ் எனர்ஜியையும், காஸ்மிக் எனர்ஜியையும் சேர்த்தால் பெரிய அற்புதம் நிகழும். எவ்வளவோ படித்தாலும் காஸ்மிக் எனர்ஜி பற்றி யாருக்கும் தெரிவதில்லை.

அதைப் பற்றிப் படத்தில் கூறியிருக்கிறேன்'' என்றார்.

cine061118
இதையும் படியுங்கள்
Subscribe