Advertisment

விமர்சனம் : செக்கச்சிவந்த வானம்

/idhalgal/cinikkuttu/review-chekka-chivantha-vaanam

"கடல்' படம் கவுத்திவிட்டதால் இனிமேல் கவனமாக இருக்க வேண்டும் என்ற கர்மசிரத்தையுடன் "செக்கச் சிவந்த வான'த்தை எடுத்திருக்கிறார் மணிரத்னம். இதுவும் கேங்ஸ்டர் கதைதான் என்றாலும் இதில் மணியின் ரத்னக் காட்சிகளால் விறுவிறுப்பா

"கடல்' படம் கவுத்திவிட்டதால் இனிமேல் கவனமாக இருக்க வேண்டும் என்ற கர்மசிரத்தையுடன் "செக்கச் சிவந்த வான'த்தை எடுத்திருக்கிறார் மணிரத்னம். இதுவும் கேங்ஸ்டர் கதைதான் என்றாலும் இதில் மணியின் ரத்னக் காட்சிகளால் விறுவிறுப்பாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கிறது.

Advertisment

ccv

பிரகாஷ் ராஜ்- ஜெயசுதா தம்பதியின் மகன்களாக அரவிந்த் சாமி, அருண்விஜய், எஸ்.டி.ஆர். ஹீரோயின்களாக ஜோதிகா, அதிதிராவ் ஹைதாரி, டயானா எரப்பா, போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி, வில்லனாக மம்பட்டியான் தியாகராஜன், டி.சி.பி.யாக கவிதா பாரதி என ஏகப்பட்ட ஸ்டார்களின் கூட்டம் இருந்தாலும் அனைவருக்கும் சமமாக சான்ஸ் கொடுத்திருக்கிறார் மணிரத்னம்.

Advertisment

ccvccv

டமார் டூமீர் என துப்பாக்கிகள் படம் முழுக்க வெடித்துக் கொண்டே இருப்பதால் அவ்வப்போது ஒரு பிணம் விழுந்து கொண்டே இருக்கிறது. "ஆபரேஷன் ரெட் ஸ்கை' திட்டத்துடன் விஜய் சேதுபதி களம் இறங்கியிருப்பதால் கேங்ஸ்டர்களான அரவிந்த் சாமி, அருண் விஜய், எஸ்.டி.ஆர்., அரவிந்த் சாமியின் மனைவியான ஜோதிகா, எஸ்.டி.ஆரின் மனைவியான டயானா என அத்தனை கேரக்டர்களும் துப்பாக்கிக் குண்டுக்கு பலிலியாகிவிடுகிறார்கள். படத்தின் ஹீரோ விஜய் சேதுபதிதான்.

"செக்கச் சிவந்த வானம்'- மணிரத்னம் பிராண்ட் துப்பாக்கிச் சத்தம்.

cine091018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe