Advertisment

எதிர் வினையாற்று

/idhalgal/cinikkuttu/reverse-reaction

மிழ் சினிமாவில் சமீபகாலமாக க்ரைம், திரில்லர் வகைப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.

Advertisment

அந்தவரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் "எதிர் வினையாற்று' படம் உருவாகியுள்ளது.

எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்

மிழ் சினிமாவில் சமீபகாலமாக க்ரைம், திரில்லர் வகைப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.

Advertisment

அந்தவரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் "எதிர் வினையாற்று' படம் உருவாகியுள்ளது.

எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோ கிராபர், ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராதவிதமாக ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிறான். அந்தப் பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டுவரும் சிக்கல்களும் அவனைப் பின்தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

444

Advertisment

அதிலிருந்து அவன் எப்படி மீண்டுவருகிறான் என்பதே "எதிர் வினையாற்று' படத்தின் கதை.

ஒரு இரவு தொடங்கி மறு இரவுக்குள் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களே விறுவிறுப்பான திரைக்கதையாகியுள்ளது. சென்னையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மைச் சம்பவத்தை அந்த நபரின் அனுமதியுடன் படமாக்கியிருக்கிறார்கள்.

படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகி றார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தைத் தயாரித்தும் இருக்கி றார். மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம்பெற்ற இவர், அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர். படத்தின் நாயகியாக சனம் ஷெட்டியும், அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர். கதைக்கு மிகவும் முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் "ஆடுகளம்' நரேன் நடித்துள்ளார்.

இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்துள்ளார். மேலும் சம்பத் ராம், அனுபமா குமார், ஜீ டிவி மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இசை- ஷெரீப், ஒளிப்பதிவு- மனோஜ் நாராயணன், படத்தொகுப்பு- சந்திரசேகரன், கலை- பாலா ஓம் பிரகாஷ், தயாரிப்பு- தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ்.

cini051119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe