டிஜி திங் மீடியா நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து, இயக்கியிருக்கும் படம் "பச்சை விளக்கு'. புதுமுகங்கள் தீசா, தாரா, "அம்மணி' புகழ் ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நந்தகுமார் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு "வேதம் புதிது' தேவேந்திரன் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பாரதிராஜா திரைப்படக் கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் மொரிஷி யஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இயக்குநர் பாரதிராஜா, இயக்கு நர் கே. பாக்யராஜ், மதுரா பாலன், மலேசிய எழுத்தாளர் நெல்லையப்பன் நாயக்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

nn

இயக்குநர் பாரதிராஜா

""மாறனின் இந்தப் பச்சை விளக்குப் படம் அரசாங்கம் எடுக்க வேண்டிய படம். பொதுநல கருத்துள்ள படம்.

மேலும் படத்தில் கமர்சியலும் இருக்கிறது. இன்று நிறையபேர் பயணத் தில் பச்சை விளக்கை மதிப்பதில்லை. "பச்சை விளக்கு' போடுமுன் போனால் நாம் போய்ச் சேர்ந்திடுவோம் என்று தெரிவதில்லை. நிதானம் இங்கு மிக முக்கியம்.

நிதானம் தவறினால் வாழ்க்கை ஒரு நொடியில் போய்விடும். நிதானமாகச் சென்றால் நீண்டநாள் வாழலாம். நீண்டவருடங்கள் இருக்கலாம். அப்படி ஒரு அழகான படத்தை இயக்கியிருக்கிறார் டாக்டர் மாறன்'' என்றார்.

கே. பாக்கியராஜ் ""இந்தப்படமே ஒரு கலப்படமா இருக்கு. டிராபிக் பற்றிய படமா இருக்கும்னு நினைச்சேன். அப்படி ஆரம்பிச்சா இடையில டூயட்லாம் பாடி ஆடுறாங்க. இன்னைக்கு இருக்குற சினிமாவில் கருத்து சொல்ற மாதிரி படம் எடுக்குறது ரொம்ப கஷ்டம். இப்படத்தின் இயக்குநர் மற்றும் ஹீரோ மாறன் படித்த படிப்பை எல்லாம் பார்த்தேன். இப்படி ஒருவர் படமெடுக்க வந்திருப்பது பெரிய விஷயம்.

பரமசிவம் பிள்ளை வையாபுரியும்' மாறனையும் "பச்சைவிளக்கு' படத்தின் சிறப்பம்சத்தையும் வெகுவாகப் புகழ்ந்தார்.