Advertisment

நட்புக்கு மரியாதை'' -புது இசையமைப்பாளர் உருக்கம்!

/idhalgal/cinikkuttu/respect-friendship-new-music-composer

யக்குநர் கேயாரின் அசோசியேட் எம். ஜெயப் பிரகாஷ் இயக்கும் படம் "வானரப்படை.' குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் இதில் முக்கியமான வேடத்தில் அவந்திகா நடிக்கிறார். இந்தப் படத்தின்மூலம் இசையமைப் பாளராக அறிமுகமாகிறார் கமலக்கண்ணன். அவரின் முதல் இசைப்பயண அனுபவத்தைப் பற்றிக் கேட்டோம்.

Advertisment

musicdirector""எனக்கு சொந்த ஊர் காஞ்சி புரம். சின்ன வயதிலிருந்தே இசை ஆர்வம் அதிகம்.

யக்குநர் கேயாரின் அசோசியேட் எம். ஜெயப் பிரகாஷ் இயக்கும் படம் "வானரப்படை.' குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் இதில் முக்கியமான வேடத்தில் அவந்திகா நடிக்கிறார். இந்தப் படத்தின்மூலம் இசையமைப் பாளராக அறிமுகமாகிறார் கமலக்கண்ணன். அவரின் முதல் இசைப்பயண அனுபவத்தைப் பற்றிக் கேட்டோம்.

Advertisment

musicdirector""எனக்கு சொந்த ஊர் காஞ்சி புரம். சின்ன வயதிலிருந்தே இசை ஆர்வம் அதிகம். சுற்று வட்டாரத்தில் கோயில் திருவிழா, அரசியல் நிகழ்ச்சிகளில் இசைக் கச்சேரி நடந்தால் முதல் ஆளாக சீட் பிடித்து கச்சேரியை ரசிப்பேன். "வானரப் படை' இயக்குநர் எம். ஜெயப்பிரகாஷ் என்னுடைய பால்ய கால நண்பர். என்னுடைய இசை ஆர்வத்தைப் பார்த்துவிட்டு அவர்தான் முறைப் படி இசை கற்றுக்கொள்ள ஐடியா கொடுத்ததோடு இசைப் பள்ளி யிலும் சேர்த்துவிட்டார்.

இப்போது அவரே "வானரப் படை' படத்தில் இசையமைப் பாளராக அறிமுகப்படுத்துகிறார்.

எல்லாருக்கும் இப்படியொரு நட்பு கிடைக்குமா என்று தெரிய வில்லை. எனக்கு அப்படியொரு நட்பு கிடைத்திருப்பதை பாக்கிய மாகப் பார்க்கிறேன்.

இசைத்துறையில் என்னுடைய மானசீக குரு இளையராஜா.

Advertisment

ஆனால் நான் இசையமைப் பாளனாக உருவாக இன்ஸ்பிரேஷ னாக இருந்தவர் ஏ.ஆர். ரஹ்மான். ஆர்க்கெஸ்ட்ரா ப்ளேயராக இருந்தேன் நான். ரஹ்மானின் நுட்பமான இசைத்திறன் எனக்குள் இசையமைக்கும் ஆர்வத்தைத் தூண்டியது.

"வானரப்படை' படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள்.

ஸ்டார் இமேஜ் உள்ள நடிகர் களுக்கு ஒர்க் பண்ணுவதற்கும் குழந்தைகள் நடிக்கும் படத்துக்கு ஒர்க் பண்ணுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு.

"அஞ்சலி அஞ்சலி' ஸ்டைலில் உருவாகியுள்ள "வானரப் படைகள்' என்ற பாடல் சிறியவர் கள் மட்டுமில்லாமல் பெரியவர் கள் மத்தியிலும் வரவேற்பு பெறும்வகையில் பிரமாதமாக வந்திருக்கு.

இது டிஜிட்டல் காலம். பாடுவது, எழுதுவது என்று எல்லாமே வாட்ஸ் அப், ஸ்கைப் என்று நெட்டோடு முடிந்துவிடுகிறது. நான் ஆர்க்கெஸ்ட்ரா பின்னணியில் இருந்துவந்ததால் "வானரப்படை'-யின் அனைத்துப் பாடல்களையும் லைவ்வாக ரிக்கார்டிங் பண்ணினோம். படத்தில் இடம்பெறும் அனைத் துப் பாடல்களையும் நானே எழுதியுள்ளேன்'' என்றார் பூரிப்புடன்.

cine050219
இதையும் படியுங்கள்
Subscribe