Advertisment

சூப்பர் ஸ்டார் ஞாபகம்! எங்களின் பாக்கியம்! -நெகிழும் படக்குழு!

/idhalgal/cinikkuttu/remember-superstar-our-privilege-guest-picture

ன்பைப் பிரதிபலிப்பதும், அராஜகத்தை எதிர்கொள்வதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை எதிர்த்தும் திகில்கள் நிறைந்த திருப்பங்களைக் கொண்ட படமாக "6-லிருந்து 6 வரை' தயாராகி, ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. "வீரத்தேவன்' படத்தில் அறிமுகமான கௌசிக் இதில் ஹீரோ. ஹீரோயின்களாக சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த குஷ்பு

ன்பைப் பிரதிபலிப்பதும், அராஜகத்தை எதிர்கொள்வதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை எதிர்த்தும் திகில்கள் நிறைந்த திருப்பங்களைக் கொண்ட படமாக "6-லிருந்து 6 வரை' தயாராகி, ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. "வீரத்தேவன்' படத்தில் அறிமுகமான கௌசிக் இதில் ஹீரோ. ஹீரோயின்களாக சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த குஷ்பு சிங், கொல்கத்தாவைச் சேர்ந்த பூஜா ஹங்குலிஆகிய இரு ரசகுல்லாக்கள் அறிமுகமாகிறார்கள். மற்ற கேரக்டர்களில் ஜெயப்பிரகாஷ், ஜார்ஜ் பிரசாத், ஜார்ஜ் பிரிட்டோ, இன்னும் பலர் நடிக்கிறார்கள்.

Advertisment

superstar""திகில் படமாக இருந்தாலும் பக்கா என்டர்டெயின்ட் படம் தான் இது. "வீரத்தேவ'-னில் பகுதி நேர ஹீரோவாக வந்த நான் இதில் படம் முழுக்க பிளேபாயாக வருகிறேன்'' என்கிறார் ஹீரோ கௌசிக்.

Advertisment

இது எந்தமாதிரியான படம் என அறிமுக டைரக்டர் ஸ்ரீஹரியிடம் கேட்டபோது, ""இதுவரை யாரும் சொல்லாத கதைன்னு எல்லாரும் சொல்வார்கள். ஆனா சத்தியமா இந்தக் கதை யாரும் சொல்லாதது தான். படம் ஆரம்பித்து ஐந்து நிமிஷத்திலேயே, ஏதோ ஒண்ணு இருக்குன்னு ரசிகர்கள் ஃபீல் பண்ணுவார்கள். மாலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணிவரை நடக்கும் சம்பங்கள்தான் கதை. படத்தின் ஹீரோ கௌசிக், ஆரம்பகால கார்த்திக் மாதிரி துள்ளலாகவும் ஸ்டைலாகவும் இருப்பார். நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார். ஜீவா வர்ஷினி என்கிற பெண் இசை அமைப்பாளரை அறிமுகப்படுத்துகிறோம். ஏ டூ இஸட் வரை பேர் கொண்ட ஹீரோயின்களைப் பற்றிய பாட்டு செம ஹிட்டடிக்கும்'' என்கிறார்.

தயாரிப்பாளர் ரோஹனோ, ""இந்தப் பட டைட்டிலைப் பார்த்தாலே, சூப்பர் ஸ்டாரின் "6-லிருந்து 60 வரை' டைட்டிலை ஞாபகப்படுத்துது என ஏகப்பட்ட பேர் சொன்னார்கள். அதுவே எங்களுக்குக் கிடைத்த பெரிய பாக்கியம்'' என்கிறார்.

cine040918
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe