தேர்ட் ஐ கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி. விஜய் தயாரிப்பில், எம்.டி. ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக்- ஆஷா பார்த்தலும் ஜோடியில் உரு
தேர்ட் ஐ கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி. விஜய் தயாரிப்பில், எம்.டி. ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக்- ஆஷா பார்த்தலும் ஜோடியில் உருவாகும் "மரிஜுவானா' படத்துவக்க விழா சில நாட்களுக்குமுன் நடைபெற்றது .
இதில் சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர்கள் பி.எல்.
தேனப்பன், சரவணன், இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், ராஜு முருகன், ஒளிப்பதிவாளர் செல்வா, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தென்னிந்திய திரைப்பட பத்திரிகைத் தொடர்பாளர் யூனியன் தலைவர் விஜய்முரளி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இயக்குநர் ராஜு முருகன் கிளாப் போர்டு அடிக்க படத்தின் முதல் காட்சி பதிவு செய்யப்பட்டது. படக்குழுவை நேரில் சந்தித்த யோகிபாபு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.