"குற்றம்-23' மற்றும் "தடம்' படங்களைத் தயாரித்த இந்தர்குமாரின் ரெதான் நிறுவனத்தின் மூன்றாவது படமாகத் தயாராகிறது "கொம்புவச்ச சிங்கம்டா.'
தன் குருநாதர் சசிகுமாரை நாயகனாக வைத்து எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கிய "சுந்தரபாண்டியன்' வெற்றிப்படத்தைத் தொடர்ந்து "கொம்புவச்ச சிங்கம்டா' படத்தின்மூலம் மீண்டும் இணைகிறது இந்தக் கூட்டணி.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/redalert.jpg)
1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன்- நாயகியாக சசிகுமார், மடோனா செபஸ்டின் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குநர் மகேந்திரன், ஹரீஷ்ஃபெராடி, "சுந்தரபாண்டியன்' துளசி, ஸ்ரீபிரியங்கா, தீபா ராமானுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.
"கொம்புவச்ச சிங்கம்டா' படப்பிடிப்பை நடிகர், இயக்குநர் சமுத்திரகனி க்ளாப் அடித்து துவக்கிவைத்தார்.
படப்பிடிப்பு இடைவிடாமல் ஒரே கட்டமாக பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர் பகுதிகளில் நடந்து குற்றாலத்தில் நிறைவடைகிறது.
ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, திபு நைனன் தாமஸ் இசையில், டான் பாஸ்கோ. படத்தொகுப்பில், ஸ்டன்ட் காட்சிகளை அன்பறிவ் வடிவமைக்க, ராஜு சுந்தரம் நடனத்தில், மைக்கேல்ராஜ் கலையில், மோகன்ராஜ் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில், பி. சந்துருவின் தயாரிப்பு மேற்பார்வையில், மக்கள் தொடர்புப் பணிகளை நிகில் கவனித்துக்கொள்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-11/redalert.jpg)