Advertisment

"எதற்கும் தயார்''

/idhalgal/cinikkuttu/ready-anything

குழந்தை நட்சத்திரமாக தென்னிந்திய படங்கள் பலவற்றில் நடித்திருந்தாலும், கதாநாயகியாக பெரிதும் பேசப்படவில்லை ஷாலினியின் தங்கையும் "தல' அஜீத்தின் மச்சினியுமான நடிகை ஷாம்லி. இவர் 2009-ஆம் ஆண்டு நடித்த "ஓய்' என்ற தெலுங்குப் படம் மோசமாக ப்ளாப் ஆன நிலையில், சினிமாவுக்கு பிரேக் கொடுத்துவிட்டு சிங்கப்பூர் சென்ற

குழந்தை நட்சத்திரமாக தென்னிந்திய படங்கள் பலவற்றில் நடித்திருந்தாலும், கதாநாயகியாக பெரிதும் பேசப்படவில்லை ஷாலினியின் தங்கையும் "தல' அஜீத்தின் மச்சினியுமான நடிகை ஷாம்லி. இவர் 2009-ஆம் ஆண்டு நடித்த "ஓய்' என்ற தெலுங்குப் படம் மோசமாக ப்ளாப் ஆன நிலையில், சினிமாவுக்கு பிரேக் கொடுத்துவிட்டு சிங்கப்பூர் சென்றார். அங்கு சினிமாவின் ஆழ, நீளங்களை அளந்துவிட்டு தற்போது மீண்டும் புதுப்பொலிவுடன் களமிறங்குகிறாராம்.

Advertisment

shamli

நாக ஷவுரியாவுடன் "அம்மம்மா காரி இல்லு' என்ற படத்தில் ஜோடிசேர்கிறார் ஷாம்லி.

""என் பள்ளியிலோ, கல்லூரியிலோ சினிமா என்ற பேச்சுக்கே இடமில்லை. அதனால், நான் சினிமாவை முழுமையாக கற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போது சினிமா புரொடக்ஷனில் மாஸ்டர் டிகிரி முடித்துவிட்டு மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே கதை களைத் தேர்வுசெய்வேன். நடனத்தில் பல பிரிவுகள் எனக்கு கைவந்த கலை'' என சினிமாவுக்கு தான் தயாராகிவிட்டதை விளக்குகிறார் நடிகை ஷாம்லி.

முதல் படத்திற்கும், இப்போதைய படத்திற்கும் ஒன்பது ஆண்டுகள் என்ற நீண்ட இடைவெளி இருந்தாலும், சினிமாவுக்கே தேவையான பிட்னெஸ் விஷயங்களிலும் கண்ணுங்கருத்துமாய் இருக்கிறாராம். "ஜிம், யோகா, டான்ஸ் என ஏகப்பட்ட வித்தைகள் கையில் இருக்க, பிட்னெஸுக்கு என்ன குறை?' என நகைக்கிறார். உங்கள் திரைத்துறை விவகாரங்களில் நடிகர் அஜீத் கவனம் செலுத்துவதாகவும், அவர் சொல்படியே நீங்கள் நடக்கிறீர்கள் என்றும் வரும் தகவல்கள் பற்றிக் கேட்டதற்கு, ""எங்கள் எண்ணமும் பயணமும் வெவ்வேறானவை. வீட்டில் சினிமாவைப் பற்றி அதிகம் பேசுவதே இல்லை'' எனக்கூறும் ஷாம்லி, ""சினிமாவை விடவும் வாழ்க்கையில் நிறையவே இருக்கின்றன'' என ஸ்மைலி முகத்தைக் காட்டுகிறார்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe