எஸ்.எச். மீடியா டிரீம் சார்பில் சாகுல் ஹமீது தயாரிக்கும் படம் "என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா.' அறிமுக இயக்குநர் நவீன் மணிகண்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கும் இப்படத்தில் விகாஷ் ஹீரோவாக நடிக்க, மதுமிதா ஹீரோயி
எஸ்.எச். மீடியா டிரீம் சார்பில் சாகுல் ஹமீது தயாரிக்கும் படம் "என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா.' அறிமுக இயக்குநர் நவீன் மணிகண்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கும் இப்படத்தில் விகாஷ் ஹீரோவாக நடிக்க, மதுமிதா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி ராமர், அம்பானி சங்கர், ராகுல் தாத்தா, டெல்லி கணேஷ், நாஞ்சில் விஜயன், நெல்லை சிவா ஆகியோர் நடிக்கிறார்கள். 22 ஆண்டுகளுக்குப்பிறகு இப் படத்தின்மூலம் ரீ என்ட்ரியாகிறார் "நல்லெண்ணெய்' சித்ரா.
""குட்டிச் சுவற்றில் உட்கார்ந்து வெட்டியாகப் பொழுதைக் கழிக்கும் இளைஞர்களும், வாய்ப்பு வந்தால் வாழ்க்கையில் சாதிப்பார்கள் என்ற கருவை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம், கலர்புல்லான காமெடி பொழுது போக்குப் படமாக உருவாகி யிருக்கிறது.
இப்படத்தில் சித்ராவும், டெல்லிகணேஷும் ஹீரோவின் பெற்றோர்களாக நடித்திருந்தாலும், அவர்களது பிளாஷ்பேக் காதல் காட்சிகள் ரசிகர்களை வயிறு வலிலிக்க சிரிக்கும் விதத்தில் வந்திருக்கிறது'' என்கிறார் டைரக்டர் நவீன் மணிகண்டன்.
முழுக்க முழுக்க நாகர்கோவிலில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது. அதைதொடர்ந்து படமும் விரைவில் வெளியாக உள்ளது.