தமிழ்சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்க களம் இறங்கிவிட்டார் நடிகை ராஷி கன்னா. அவரது பெயரிலுள்ள ராசி அவரது சினிமா கேரியரிலும் தொடர்வது அவரது ரசிகர்களைப் போலவே தயாரிப்பாளர்களையும் மகிழ்வித்துவருகிறது. இதைவிட அனைவரையும் மகிழ்விப்பது ராஷிகண்ணா வின் எகிடு தகிடான கிளாமர் போட்டோக்கள் தான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rasikhanna_0.jpg)
தமிழில் "இமைக்கா நொடிகள்', "அடங்கமறு', "அயோக்யா' ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் சந்தர் இயக்கும் "சங்கத்தமிழன்' படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்துவருகிறார். இந்தப் படமும் வெற்றிக்கான உத்திர வாதத்தோடு வளர்ந்து வருகிறது. மேலும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக கிராந்தி மாதேவ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்துவருகிறார்.
மேலும் "வெங்கிமாமா' என்ற தெலுங்குப் படத்தில் வெங்கடேஷ், நாக சைதன்யா ஆகியோருடன் நடித்துவருகிறார். மிருதி இயக்கத்தில் சாய் தரம்தேஜ் உடன் ஒருபடமும் தெலுங்கில் அவரது கைவசம் உள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rasikhanna1.jpg)
தமிழில் டாப் ஹீரோக்க ளின் இரண்டு படங்களிலும் ராஷி கன்னாவே நாயகியாக நடிக்க இருக்கிறார்.
ரசிகர்களை தன் கதாபாத்திரத் தோடு ஒன்ற வைப்பதில் திறமைவாய்ந்தவர் நடிகை ராஷி கன்னா. அதனால் தான் திறமையோடு அழகும் சேர்ந்த அவருக்கு தயாரிப்பாளர் களும் டைரக்டர்களும் சான்ஸ்களை வாரிவழங்குகிறார்கள். ராஷிகன்னாவும் ரவுண்டு கட்டி அடிக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/rasikhanna-t.jpg)