"காலா'-வின் வெற்றிச் செய்தியுடன் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் அடுத்த பட ஷூட்டிங்கிற்காக மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் டேரா போட்டிருக்கிறார் ரஜினி. கார்த்திக் சுப்புராஜ் டைரக்ஷன் பண்ணும் இப்படத்தின் பெயரை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். படப்பேரா முக்கியம். ரஜினி நடிக்கிறதுதானே முக்கியம். படத்தில் ரஜினிக்கு என்ன கேரக்டர், ரஜினிக்கு ஜோடி யார் என பல கட்டமாக மட்டுமல்ல; ஏகப்பட்ட கட்டங்களாக விசாரித்தோம்.

Advertisment

rajini

முதல் தகவல் என்னன்னா, படத்தின் அட்மாஸ்பியரில் நடிப்பதற்காக சென்னையிலிருந்து 1500-க்கும் மேற்பட்ட துணை நடிகர்- நடிகைகள் டார்ஜிலிங்கிற்குப் போய் இருக்கிறார்கள். முதல் இரண்டு நாட்கள் நடித்தவர்கள், மூன்றாம் நாளில் குளிருக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், பாதிக்கும் மேற்பட்ட வர்கள் சென்னைக்கே ரிட்டர்ன் ஆகி விட்டார்களாம். மொத்தம் 40 நாட்கள் ஷூட்டிங் நடத்தியாகணுமே என யோசிச்ச தயாரிப்பு நிர்வாகிகள், பெங்கால் சினிமா தொழிலாளர்கள் யூனியனிலிருந்தும் பக்கத்து மாநில யூனியன்களிலிருந்தும் ஆட்களை இறக்கிவிட்டார்களாம். அதன்பின் இப்போது ஷூட்டிங் ஜரூராக போய்க்கொண்டிருக்கிறதாம்.

simran

Advertisment

ரெண்டாவது அதி முக்கியத் தகவல் என்னன்னா, இந்தப் படத்தில் காலேஜ் புரொபசராக நடிக்கிறாராம் ரஜினி. இவருக்கு ஜோடி சிம்ரன். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். காலேஜ் புரொபசர் வேடம் என்பதால், ரஜினிக்கு எந்த சிரமமும் வரக்கூடாது என்பதற்காக கல்கத்தாவிலும் டார்ஜிலிங்கிலும் இரண்டு பெரிய கல்லூரிகளை 40 நாட்களுக்கு, வாடகைக்கு அமர்த்தியிருக்கிறதாம் சன் பிக்சர்ஸ். ரஜினியின் உதவியாளராக முனீஸ்காந்த் நடிக்கிறார்.

-ஈ.பா. பரமேஷ்