Advertisment

ரஜினியின் ரகசிய சந்திப்பு! -மணல் மாஃபியா பைட்!

/idhalgal/cinikkuttu/rajinis-secret-meeting-sand-mafia-fight

22-ஆம் தேதி தலைமை நிர்வாகி களுடன் ஆலோசனை நடத்தினார். ரஜினி ஆலோசனை நடத்தும் தகவல், அனைத்து மா.செ.க் களுக்கும் தெரிந்ததும், "தலைவர் நல்ல முடிவை அறிவிப்பார்' என்ற நம்பிக்கையில் இருந்தனர். 23-ஆம் தேதி ரஜினி ரிலீஸ் பண்ணிய அறிக்கையோ ரசிகர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட்டாக இருந்தது.

Advertisment

rajinifans

""நமது மக்கள் மன்றத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்துமே என் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு என் ஒப்புதலுடன்தான் அறிவிக்கப்படுகின்றன. "தன் குடும்பத்தைப் பராமரிக்காமல் மன்றப் பணிகளுக்காக யாரும் வரவேண்டாம். மன்றத்திற்காக செலவு செய்யவேண்டுமென யாரையும

22-ஆம் தேதி தலைமை நிர்வாகி களுடன் ஆலோசனை நடத்தினார். ரஜினி ஆலோசனை நடத்தும் தகவல், அனைத்து மா.செ.க் களுக்கும் தெரிந்ததும், "தலைவர் நல்ல முடிவை அறிவிப்பார்' என்ற நம்பிக்கையில் இருந்தனர். 23-ஆம் தேதி ரஜினி ரிலீஸ் பண்ணிய அறிக்கையோ ரசிகர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட்டாக இருந்தது.

Advertisment

rajinifans

""நமது மக்கள் மன்றத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்துமே என் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு என் ஒப்புதலுடன்தான் அறிவிக்கப்படுகின்றன. "தன் குடும்பத்தைப் பராமரிக்காமல் மன்றப் பணிகளுக்காக யாரும் வரவேண்டாம். மன்றத்திற்காக செலவு செய்யவேண்டுமென யாரையும் நான் சொன்னது கிடையாது. நான் மன்றத்தினருக்குக் கொடுத்திருக்கும் வேலை, பணம் செலவுசெய்து முடிக்கவேண்டிய வேலையும் கிடையாது. பணம் செலவழித் தேன் என்று யாராவது சொன் னால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

30, 40 வருடங்கள் ரசிகர் மன்றத் தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலிலில் ஈடுபடுவதற்கோ முழுத்தகுதி ஆகிவிட முடியாது. அதுதான் தகுதி என நினைத் தால் அவரது புத்தி பேதலித் துள்ளது என்றுதான் அர்த்தம்'' என்ற ரஜினியின் அறிக்கை அரசியல் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்குப் பேரிடியானது.

Advertisment

rajini

ரஜினியின் இந்த அதிர்ச்சி அறிக்கை வெளியான சில நிமிடங்களிலேயே பதினைந்துக்கும் மேற்பட்ட மா.செ.க்கள் நம்மைத் தொடர்புகொண்டனர்.

""புத்தி பேதலிச்சிருச்சுன்னு எங்களையெல்லாம் சொல்லிலியிருக்கிறாரு தலைவர். உண்மை தான்; புத்தி பேதலிலிச்சதால 40 வருஷமா இவர் பின்னால் நின்றோம். அவரின் ஒவ்வொரு படமும் ரிலீசாகும்போதும் எங்க கைக்காசைப் போட்டுத்தான் கட்-அவுட்டுக்கு பாலபிஷேகம், ரசிகர் மன்ற ஸ்பெஷல் ஷோவை யெல்லாம் நடத்தினோம். எங்க குடும்பத்தை நடுத்தெருவுல விட்டுட்டு வந்து யாரும் பதவி கேட்கல. "மன்றத்துக்காக செலவு பண்ணுனேன்னு சொன்னா நான் நம்பமாட்டேன்'னு தலைவர் சொல்றாரே. செலவு இல்லாம பூத் கமிட்டி அமைக்க முடியுமா? சீராய்வுக் கூட்டத்துக்காக ஏழெட்டு முறை சென்னைக்கு நிர்வாகிகளுடன் வந்து போனோமே, செலவழிக்காம இதெல்லாம் முடியுமா? பொது மக்களுக்கு பொறுப்பு கொடுக் கணும்னு சொல்றாரு.

rajini

அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், சவுதியில இருக்குற வர்களுக்கு இங்கே மன்றத்தில் பொறுப்பு கொடுத்தார்களே, அந்த மாதிரி ஆட்கள்தான் பொதுமக்களா? அவரோட நம்பிக்கை வட்டாரம், "கார்ப்பரேட் அரசியல்' நடத்த நினைக்கின்றன. கார்ப் பரேட் கம்பெனியில் எங்களை மாதிரி கைநாட்டு களுக்கு என்ன வேலை?''’என்றனர்.

இங்கிருப்பவர்களை ஆட்டு விக்கும் அரசியல் ஆடிட்டர் ஒருவரின் வீட்டிற்கு அடிக்கடி செல்கிறார் ரஜினி. அதேசமயம் தி.மு.க. தலைமையுடன் நெருக்க மாக இருக்கும் சிமெண்ட் அதிபர்மூலம் தி.மு.க.வைச் சேர்ந்த மாஜி மத்திய மந்திரி ஒருவரையும் சந்தித்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி இரவு டிராவல்ஸ் காரில் பயணம்செய்து, கோட்டூர்புரம் பாலம் அருகே, காரிலேயே அமர்ந்து ரஜினியும் மாஜியும் நீண்டநேரம் பேசியுள்ளனர்.

rajini

மதுரை வைகை ஆற்றில் மணல் திருடும் மாஃபியாக்களுடன் ரஜினி ஆக்ரோஷமாக மோதும் ஃபைட் சீனுடன் "பேட்ட' படத் திற்கு நிறைவு பூஜை போட்டுள்ளார்கள். வைகை ஆற்று சீனை கங்கை நதிக்கரையில் படமாக்கியிருக்கிறார் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்.

-ஈ.பா.பரமேஷ்வரன்

cine061118
இதையும் படியுங்கள்
Subscribe