Advertisment

ரஜினியின் அடுத்த படம்!

/idhalgal/cinikkuttu/rajinis-next-film

ன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. 40 நாட்கள் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் முதல் கட்ட ஷெட்யூலை முடித்துவிட்டு, கல்கத்தாவிலிருந்து பெங்களூர்வந்து ராமகிருஷ்ண மடத்துக்கு சென்று ஆசிவாங்கிவிட்டு சென்னை திரும்பினார் ரஜினி. இந்தப் படம் முடிந்ததும் அரசியல் கட்சிப் பெயரை தலைவர் அறிவிப்பார் என ஆவலோடும் ஆசையோடும் காத்திருக்கிறார்கள் ரஜினி மக்கள் ம

ன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. 40 நாட்கள் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் முதல் கட்ட ஷெட்யூலை முடித்துவிட்டு, கல்கத்தாவிலிருந்து பெங்களூர்வந்து ராமகிருஷ்ண மடத்துக்கு சென்று ஆசிவாங்கிவிட்டு சென்னை திரும்பினார் ரஜினி. இந்தப் படம் முடிந்ததும் அரசியல் கட்சிப் பெயரை தலைவர் அறிவிப்பார் என ஆவலோடும் ஆசையோடும் காத்திருக்கிறார்கள் ரஜினி மக்கள் மன்றத்தினர்.

Advertisment

rajini

தான் விதித்த கெடு முடிந்த பின்னும் பூத் கமிட்டி அமைப்பதில் மன்றத்தினர் வேகம் காட்டாததால், கொஞ்சம் அப்செட்டாகிவிட்டார் ரஜினி. இந்த அப்செட் மைன்டை மாற்றுவதற்காவும், தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதாலும், அடுத்த படத்தில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ரஜினி.

Advertisment

sangilimuruganதனது அடுத்த படத்தைத் தயாரிக்கும் மிகப்பெரிய பொறுப்பை மூத்த தயாரிப்பாளர் சங்கலிலி முருகனுக்கு கொடுத்து, அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளாராம் ரஜினி. ஏவிஎம் நிறுவனம் "சிவாஜி'-யை எடுத்தபோது, ரஜினியை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதற்காக சீனியர் டைரக்டர் எஸ்.பி. முத்துராமனை இணை தயாரிப்பாளராக நியமித்தார்கள். இதற்காக பெரிய தொகையும் எஸ்.பி.எம். முக்கு சம்பளமாகப் பேசப்பட்டது.

அதேபோல் "கபாலி' எடுக்கும்போது, ரஜினியை அருகில் இருந்து கவனிக்கவும், தயாரிப்புச் செலவுகளை கண்காணிக்க வும் சங்கிலி முருகனை எக்ஸ்கியூட்டிவ் புரொடியூசராக்கினார் கலைப்புலி எஸ். தாணு. 40 நாட்கள் மலேசியாவில் ரஜினியின் நிழலாகவே இருந்தார் சங்கிலி முருகன். சங்கிலிலி முருகனின் தெய்வ பக்தி, ஷூட்டிங் ஸ்பாட்டில் வேலை வாங்கும்விதம், தனக்குத் தேவையானதைச் செய்து கொடுத்தவிதம் இதை யெல்லாம் பார்த்த ரஜினிக்கு சங்கிலி முருகனை ரொம்பவே பிடித்துவிட்டதாம்.

மலேசியா ஸ்டார் ஓட்டலிலில் தங்கியிருந்தபோது, சில பவுன்கள் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை, சங்கிலி முருகனுக்கு ரஜினி பரிசளித்த போது, ""நகையெல்லாம் போட்டு பல வருச மாச்சு. இப்ப என் கழுத்துல ருத்ராட்சம் மட்டும்தான். அதனால் எனக்கு இந்த சங்கிலி வேண்டாம்; ப்ளீஸ்!'' என அன்போடு மறுத்து விட்டாராம் சங்கிலி முருகன்.

rajini

அந்த சங்கிலி முருகனுக்குத்தான் தனது கால்ஷீட் என்னும் தங்கப் புதை யலையே தந்துள்ளார் ரஜினி.

-ஈ.பா. பரமேஷ்வரன்

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe