Advertisment
/idhalgal/cinikkuttu/rajini-tension

மார்ச்.01-ஆம் தேதியிலிருந்து புதுப்படங்கள் எதுவும் ரிலீசாகாது என அறிவித்தது தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம். மார்ச் 16-ஆம் தேதியிலிருந்து தியேட்டர்களை மூடுவோம் என்றது தியேட்டர் அதிபர்கள் சங்கம். ஆனால் ஏழே நாளில், அதாவது 23-ஆம் தேதியிலிருந்து தியேட்டர்கள் இயங்கும் என அறிவித்தார்கள் தியேட்டர் ஓனர் கள். மார்ச் 16-ஆம் தேதியிலிருந்து படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து என தடாலடியாக அறிவித்தது தயாரிப்பாளர்கள் சங்கம்.

Advertisment

rajini

ஆளே இல்லாம யாருக்குடா டீ ஆத்துறேங்கிற கதையா, படமே ரிலீ

மார்ச்.01-ஆம் தேதியிலிருந்து புதுப்படங்கள் எதுவும் ரிலீசாகாது என அறிவித்தது தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம். மார்ச் 16-ஆம் தேதியிலிருந்து தியேட்டர்களை மூடுவோம் என்றது தியேட்டர் அதிபர்கள் சங்கம். ஆனால் ஏழே நாளில், அதாவது 23-ஆம் தேதியிலிருந்து தியேட்டர்கள் இயங்கும் என அறிவித்தார்கள் தியேட்டர் ஓனர் கள். மார்ச் 16-ஆம் தேதியிலிருந்து படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து என தடாலடியாக அறிவித்தது தயாரிப்பாளர்கள் சங்கம்.

Advertisment

rajini

ஆளே இல்லாம யாருக்குடா டீ ஆத்துறேங்கிற கதையா, படமே ரிலீசாகாம தியேட்டர்களைத் திறந்து வச்சு என்ன பண்ணப் போறாங்கன்ற கதை ஒருபக்கம் இருக்கட்டும். இப்ப ரஜினியின் "காலா' கதைக்கு வருவோம். "காலா' கதைன்னா, படத்தோடு கதைன்னு நினைச்சுப்புடாதீகப்பு. இது வேற விவகாரம்.

இமயமலையிலிருந்து ரிட்டர்ன் ஆன ரஜினி, ""நான் அப்பவும் சொல்றேன், இப்பவும் சொல்றேன், எனக்குப் பிடிக்காத வார்த்தை சினிமா ஸ்டிரைக். நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி''ங்கிற ரேஞ்சுக்கு கடுப்பானாரு ரஜினி. ஏன்னா "காலா' படம் ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீசுன்னு ஒரு மாசத்துக்கு முன்னாலேயே நாள் குறிச்சாச்சு. அதனால் சென்சார் சர்டிஃபிகேட் வாங்கி ஆகணுமே. சென்சார் சர்டிஃபிகேட் வாங்கணும்னா, தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து பப்ளிசிட்டி க்ளியரன்ஸ் சர்டிஃபிகேட் கொடுத்தாகணும்.

Advertisment

இங்கதான் விவகாரமும் வில்லங்கமும் ஆரம்பிச்சது. மலையாளத்தில் செம ஹிட்டான மம்முட்டி நடிச்சு, சித்திக் டைரக்ட் பண்ணிய "பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் தமிழ் ரீமேக் ரைட்சை வாங்கிய தயாரிப்பாளர் எஸ்.எஸ். துரைராஜ், படத்தை ரஜினிக்கு போட்டுக் காட்டினார். முதலில் ஓ.கே.சொன்ன ரஜினி, ஏனோ சில யோசனைக்குப் பின் நோ சொல்லிவிட்டார். அதன்பின் அரவிந்த்சாமி-அமலாபால் காம்பினேஷனில், அதே சித்திக் டைரக்ஷனில் "பாஸ்கர் ஒரு ராஸ்கல்' தயாராகிவிட்டது.

rajinikanth

இப்போது "காலா'வை சென்சார் பார்ப்பதற்காக, பப்ளிசிட்டி க்ளியரன்ஸ் சர்டிஃபிகேட்டுக்காகத் தயாரிப்பாளர்கள் கவுன்சிலுக்குப் போனார், "காலா'-வின் தயாரிப்பாளரான தனுஷ். ""இப்ப ஸ்டிரைக் நடக்குது, ஸ்ரைக் முடிஞ்சதுக்கப்புறம், மார்ச்சில் ரிலீசாக வேண்டிய படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கணும். அதனால் "காலா'-வுக்கு இப்போதைக்கு மேற்படி சர்டிஃபிகேட் கொடுக்க முடியாது''ன்னு கடுப்பா சொன்னா ராம் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.எஸ். துரைராஜ்.

arvindsamy

தனுஷ்மூலம் துரைராஜின் சேட்டையைக் கேள்விப்பட்ட ரஜினி செம டென்ஷனாகிட் டாராம். ஆனாலும் மாமாவும் மருமகனும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலும் மெம்பர்ங்கிறதால, அந்த சபைமூலம் பப்ளிசிட்டி க்ளியரன்ஸ் சர்டிஃபிகேட்டை வாங்கிட்டாகளாம்.

ஆத்தாடி ரஜினி படத்துக்கே இம்புட்டு வில்லங்கமா இருக்கே, நம்ம படத்தையெல்லாம் என்ன பாடுபடுத்துவாகளோன்னு தயாரிப்பாளர்கள் சங்கத்தை நினைச்சு அரண்டு போய்க்கிடக்காகளாம் சின்ன தயாரிப்பாளருக.

--ஈ.பா.பரமேஷ்வரன்

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe