ரஜினி- ராகவா லாரன்ஸ்! சீக்ரெட் மேட்டர்!

/idhalgal/cinikkuttu/rajini-raghava-lawrence-secret-matter

த்தே நாட்களில் 130 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்து தமிழ் சினிமாவின் மெகா ஹீரோக்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது ராகவா லாரன்சின் "காஞ்சனா-3.' இந்த உற்சாகத்துடன், "காஞ்சனா' முதல் பாகத்தை இந்தியில் எடுப்பதற்காக மும்பையில் டேரா போட்டு

த்தே நாட்களில் 130 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்து தமிழ் சினிமாவின் மெகா ஹீரோக்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது ராகவா லாரன்சின் "காஞ்சனா-3.' இந்த உற்சாகத்துடன், "காஞ்சனா' முதல் பாகத்தை இந்தியில் எடுப்பதற்காக மும்பையில் டேரா போட்டுள்ளார் ராகவா லாரன்ஸ். தமிழில் ராகவா நடித்த கேரக்டரில் அக்ஷய் குமார், சரத்குமார் நடித்த கேரக்டரில் அமிதாப்பச்சன், ஹீரோயினாக கியாரா அத்வானி என மெகா நடிகர்களுடன் கூட்டணி போட்டுள்ளார் ராகவா. சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ், மும்பையில் "தர்பார்' ஷூட்டிங்கில் இருக்கும் ரஜினியை, "காஞ்சனா-3'-யின் ஹீரோயின்களில் ஒருவரான வேதிகாவுடன் சென்று சந்தித்து வாழ்த்த்து பெற்றுள்ளார்.

k

அப்போது ராகவா லாரன்ஸிடம், ""வரிசையா பேய்க்கதையா எடுக்குறீங்களே, வேற சப்ஜெக்ட் யோசிங்க'' என்று அன்பாக யோசனை சொன்னாராம் ரஜினி. ""உங்களுக்கு ஏத்த செம மாஸ் கதைகூட என்கிட்ட இருக்கு தலைவரே'' என்று ராகவா லாரன்ஸ் பவ்யமாக சொன்னதைக் கேட்டு, தனக்கே உரிய ஸ்டைலில் சிரித்தாராம் ரஜினி.

rf

""ரஜினி சாரை பார்க்குறதுக்கு வேதிகாவை மட்டும் கூட்டிட்டுப் போயிருக்கீங்க. என்னைக் கூட்டிட்டுப் போகணும்னு தோணலையா'' என ராகவா லாரன்சிடம் செல்லமாக சிணுங்கிக் கொண்டிருக்கிறார் களாம். "காஞ்சனா-3'-யின் மற்ற ஹீரோயின்களான நிக்கிதம் போலியும், ஓவியாவும்.

-பரமேஷ்

cine140519
இதையும் படியுங்கள்
Subscribe