ர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, சினிமாவில் அளப்பரிய சாதனைகளை புரிந்ததற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு "வாழ்நாள் சாதனையாளர்' விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளது மத்திய அரசு.

Advertisment

rrrr

வருகிற 20-ஆம் தேதி கோவாவில் நடைபெறும் திரைப்பட விழாவில், ரஜினிக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.

Advertisment

குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினரையும் காந்தம்போல் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டாருக்கு இந்த விருது வழங்கப்படுவது மிகப் பொருத்தமே.

rr

இந்த மகிழ்ச்சி செய்தி அடங்குவதற்குள் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது. லைக்கா தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் டைரக்ஷனில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் "தர்பார்' படத்தின் மோஷன் போஸ்டரும், தீம் மியூசிக்கும் நான்கு மொழிகளில் கடந்த 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

Advertisment

தமிழ் மோஷன் போஸ்டரை கலைஞானி கமல், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் மகேஷ்பாபு, இந்தியில் சல்மான்கான் ஆகியோர் வெளியிட்டனர்.