Advertisment

ரஜினி கமல் கூட்டணி!

/idhalgal/cinikkuttu/rajini-kamal-alliance

ஜினி- லைக்கா- ஏ.ஆர். முருகதாஸ் மெகா கூட்டணியின் "தர்பார்' படத்தின் இறுதிக்கட்ட டச்-அப் வேலைகள் நடந்துவருகின்றன.

Advertisment

தனது முழுபோர்ஷனுக்கான டப்பிங்கையும் பேசிமுடித்துவிட்டார் ரஜினி. படத்தின் வியாபாரத்தை யும் சூடு பறக்க நடத்திவருகிறார் சுபாஷ்கரண்.

kk

"தர்பாரு'க்கு அடுத்து சன்

ஜினி- லைக்கா- ஏ.ஆர். முருகதாஸ் மெகா கூட்டணியின் "தர்பார்' படத்தின் இறுதிக்கட்ட டச்-அப் வேலைகள் நடந்துவருகின்றன.

Advertisment

தனது முழுபோர்ஷனுக்கான டப்பிங்கையும் பேசிமுடித்துவிட்டார் ரஜினி. படத்தின் வியாபாரத்தை யும் சூடு பறக்க நடத்திவருகிறார் சுபாஷ்கரண்.

kk

"தர்பாரு'க்கு அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்க, "சிறுத்தை' சிவா டைரக்ஷனில் ரஜினி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் தொடங்குகிறது. நயன்தாரா நடிக்கிறார்,

Advertisment

கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா நடிக்கிறார்கள் என செய்திகள் றெக்கை கட்டிப் பறந்தா லும், இன்னும் எதுவும் அதிகாரப்பூர்வமாக (இந்த "சினிக்கூத்து' இதழ் அச்சாகும்வரை) அறிவிக்கப்படவில்லை.

கார்த்தியின் "கைதி' மெகா ஹிட்டால், இப்போது விஜய் படத்தை டைரக்ட் பண்ணிவருகிறார் லோகேஷ் கனகராஜ். விஜய்- ஆண்ட்ரியா, சாந்தனு சம்பந்தப்பட்ட காட்சிகள் இப்போது சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே நடந்துவருகிறது.

அதெல்லாம் ஓல்டு நியூஸ். இப்ப லேட்டஸ்ட் ஹாட் நியூஸுக்கு வருவோம். "சிறுத்தை' சிவா டைரக்ஷனில் நடிக்கத் தயாராகிவரும் ரஜினி, அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் நடிப்பதற்கும் ரெடியாகி விட்டார். இதில் கூடுதல் விசேஷமான சங்கதி என்னன்னா, ரஜினி நடிக்கும் அந்தப் படத்தைத் தயாரிக்கப்போவது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் என்பதுதான். படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் கமல்.

கலையுலகில் தனது மூத்த அண்ணன், நெருங்கிய நண்பன் என கமல் குறித்து பெருமையுடன் பேசுவார் ரஜினி. வரும் காலத்தில் அரசியலில் கூட்டணி சேர்கிறார்களோ இல்லையோ, தற்போது தனது நண்பனுக்காக சினிமாவில் கூட்டணி சேர்ந்திருக்கிறார் ரஜினி.

-007

cini171219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe