Advertisment

"ராஜ்கிரணின் பெருந்தன்மை'' -வில்லன் நடிகரின் சிலிர்ப்பு வெடி!

/idhalgal/cinikkuttu/rajgirans-generosity-villian-actors-explosion

விஷால்மூலம் ஐந்து ஆண்டுகளுக்குமுன் "நான் சிகப்பு மனிதனி'-ல் அறிமுகமானவர் ஆர்ஜெய்.

Advertisment

சற்றே இடைவெளிக்குப்பின் "சண்டக்கோழி-2'-ல் விஷாலுடன் மோதும் வில்லனாக உயர்ந்துள்ளார்.

Advertisment

rajkiran

படப்பிடிப்பு அனுபவம் பற்றியும் விஷாலுடன் நடித்தது பற்றியும் என்ன சொல்றார்னா- ""ஆரம்பத்தில் பெரிதாகப்

விஷால்மூலம் ஐந்து ஆண்டுகளுக்குமுன் "நான் சிகப்பு மனிதனி'-ல் அறிமுகமானவர் ஆர்ஜெய்.

Advertisment

சற்றே இடைவெளிக்குப்பின் "சண்டக்கோழி-2'-ல் விஷாலுடன் மோதும் வில்லனாக உயர்ந்துள்ளார்.

Advertisment

rajkiran

படப்பிடிப்பு அனுபவம் பற்றியும் விஷாலுடன் நடித்தது பற்றியும் என்ன சொல்றார்னா- ""ஆரம்பத்தில் பெரிதாகப் பேசாமல் தானுண்டு நடிப்புண்டு என்றிருந்த அண்ணன் விஷால் என் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும்போது "நன்றாகச் செய்' என்று பெரிதும் ஊக்கப் படுத்தினார். குறிப்பாக, அந்தப் பஞ்சாயத்துக் காட்சியில் என் நடிப்பு சிறப்பாக அமைய பெரிதும் அக்கறை காட்டினார்.'

"வரலட்சுமிய எனக்கு சுமார் ஐந்து ஆண்டுகளாகத் தெரியும். நண்பரும்கூட. அதனால் அவருடன் நடிப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் ராஜ்கிரண் என்கிற பெரிய நடிகருடன் நடிப்பது எப்படி? திரையில் அவர் வந்துவிட்டால் அவர் மட்டும்தானே தெரிவார்! இந்தப் பயம் எனக்குள் இருந்தது. என்றாலும் அவர் என்னுடன் சகஜமாகப் பேசி, என்னை ஊக்கப்படுத்தினார். நான் மட்டுமல்ல; எல்லாரும் அந்தப் பஞ்சாயத்துக் காட்சியைப் பெரிதும் பலமாக எண்ணியிருந்தோம். அதை மட்டுமே மூன்று நாட்கள் எடுத்தார்கள். முதல் நாள் படப்பிடிப்பு முடிந்ததும் எனக்கு நாம் சரியாகச் செய்தோமா என்று பயமாக இருந்தது. மறுநாள் ராஜ்கிரண் சார் என்னை ""தம்பி இங்கே வா'' என்று கூப்பிட்டு ""நேற்று என்னை எதிர்த்து திமிராகப் பேசியது நன்றாக இருந்தது! அந்த தெனாவெட்டு போதாது. மேலும் வீரியமாக இருக்கவேண்டும்'' என்றுகூறி ஊக்கப்படுத்தினார்.

அதன்படி நடித்தேன். இப்போது எல்லாரும் பாராட்டுகிறார்கள். தன்னுடன் நடிக்கும் சக நடிகன் அறிமுகநிலையில் இருந்தாலும் பாராட்டி, ஊக்கம் தந்த அவரது பெருந்தன்மை வியக்கவைத்தது'' என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

cine131118
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe