Advertisment

அதுக்கும் அசராத ராய்லட்சுமி!

/idhalgal/cinikkuttu/railakshmi

ஜெய், ராய்லட்சுமி, வரலட்சுமி, கேத்ரின் தெரஸா காம்பினேஷனில் தயாராகியுள்ளது "நீயா-2.' எல். சுரேஷ் டைரக்ட் பண்ணியுள்ளார். படத்தின் புரமோ ஃபங்ஷன் ஹைலட்ஸ்.

Advertisment

roylakshmi

இயக்குநர் வெற்றிமாறன் சுரேசும் நானும் ஒன்றாகப் பணியாற்றியிருக்கி றோம். தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பார். சுரேஷ் சோர்வடைந்து நான் பார்த்தது கிடையாது. எந்த சூழ்நிலையிலும் உறுதியைக் கைவிடமாட்டார். வெற்றிக்கு எது ஏற்றதோ அதை சிறப்பாக செய்யக்கூடிய ஆற்

ஜெய், ராய்லட்சுமி, வரலட்சுமி, கேத்ரின் தெரஸா காம்பினேஷனில் தயாராகியுள்ளது "நீயா-2.' எல். சுரேஷ் டைரக்ட் பண்ணியுள்ளார். படத்தின் புரமோ ஃபங்ஷன் ஹைலட்ஸ்.

Advertisment

roylakshmi

இயக்குநர் வெற்றிமாறன் சுரேசும் நானும் ஒன்றாகப் பணியாற்றியிருக்கி றோம். தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பார். சுரேஷ் சோர்வடைந்து நான் பார்த்தது கிடையாது. எந்த சூழ்நிலையிலும் உறுதியைக் கைவிடமாட்டார். வெற்றிக்கு எது ஏற்றதோ அதை சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றல் அவரிடம் இருக்கிறது. இப்படத்தைப் பார்க்கும்போது வெற்றியடையும் என்று தோன்றுகிறது.

varalakshmi

Advertisment

ராய்லட்சுமி இரண்டு வருடங்களுக்குப்பிறகு தமிழில் நடிக்கிறேன். சுரேஷ் கதை கூறினார். மூன்று மணி நேரம் கதை கேட்டபிறகு இது பெரிய படமாக இருப்பதுபோல் உள்ளது. அதை கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று பொறுமையாக ஆலோசித்து முடிவெடுத்தேன். பாம்பை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம். பேய்ப் படங்களுக்கு நிறைய வாய்ப்பு வந்தது. ஆனால் இப்படத்தில் காதல், திரில்லர் அதனுடன் பெரிய்ய்ய பாம்பு இருப்பதில் மகிழ்ச்சி.

இயக்குநர் எல். சுரேஷ் பாலுமகேந்திராவிடம் நானும் வெற்றிமாறனும் உதவியாளராக இருந்தோம். எனது முதல் படம் தெலுங்கு. அதன் தமிழ்ப் பதிப்பு தான் "எத்தன்.' ஒரு இயக்குநருக்கு படம் என்பது எந்தளவு முக்கியம் என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதே போல் என் முயற்சியின் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. ""பாம்புக்கு படம் பண்ண னும்'' என்று கூறினார்.

பாம்புக்கு எப்படி படம் பண்ணுவது என்று யோசிக்கும்போது தொலைக்காட்சியில் "நாகினி' தொடரைப் பார்த்தேன். சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. பிறகுதான் இந்த கதை தோன்றியது. "நீயா' படத்தில் நிஜ பாம்பைதான் காட்டியிருப்பார்கள். அதேபோல் இப்படத்திலும் ராஜநாகத்தை வைத்து இயக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காக பாம்பைப் பற்றி தெரிந்துகொள்ள பாங்காங்கிற்குச் சென்றோம். அங்கு ராஜநாகத்தை வீட்டில் வைத்து வளர்த்துவருகிறார்கள்.

pg7

ஒரு நண்பரிடம் பாம்பு படத்தை காட்டினேன். அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நிஜ பாம்பு இப்படி இருக்காது என்றார். பாங்காக்கில் இருக்கும் பாம்பின் படம்தான் இது என்றேன். ஆகையால் இப்படத்தில் கிராபிக்ஸ் இல்லாமல் நிஜ பாம்பை தான் காட்டியிருக்கிறோம். பெரிய பாம்பைப் பார்த்து ராய்லட்சுமி உட்பட யாருமே பயப்படவில்லை, அசரவில்லையாம்.

வரலட்சுமிக்கு கடினமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறோம். அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

cine260319
இதையும் படியுங்கள்
Subscribe