Advertisment

ராய் லட்சுமியின் அக்கப் போர் பொங்கல்!

/idhalgal/cinikkuttu/rai-lakshmis-pongal

பெங்காலிருந்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் ராய்லட்சுமி. இவர் நடித்த படங்கள் எல்லாம் ஓஹோன்னு ஓடாட்டாலும் ஓரளவுக்கு ஓடியது. கிளாமரை வாரி இறைப்பதில் வஞ்சம் வைக்காதவர் ராய் லட்சுமி. சுந்தர்.சி.யின் "அரண்மனை'-யில் செம க்யூட் & க்ளாமர

பெங்காலிருந்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் ராய்லட்சுமி. இவர் நடித்த படங்கள் எல்லாம் ஓஹோன்னு ஓடாட்டாலும் ஓரளவுக்கு ஓடியது. கிளாமரை வாரி இறைப்பதில் வஞ்சம் வைக்காதவர் ராய் லட்சுமி. சுந்தர்.சி.யின் "அரண்மனை'-யில் செம க்யூட் & க்ளாமராகக் கலக்கியிருப்பார். இந்தியில் "ஜூலி' படத்தில் கவர்ச்சியின் உச்சத்திற்கே போனார். பாலிவுட்டிலும் ஒரு கலக்கு கலக்கலாம்னுதான் நினைத்தார். ஆனால் அதன்பின் எந்தப் படமும் இந்தியில் கமிட்டாகவில்லை.

Advertisment

railakshmi

இப்போது தமிழில் "மிருதா' என்ற பேய்ப்படத்தில் நடித்து வருகிறார். ராய்லட்சுமியிடம் மாட்டிக்கிட்டு, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பேப்பாடு பெரும்பாடு பட்டுக்கிட்டிருக்காராம். அட நீங்க வேறமாதிரி நினைச்சுப்புடாதீக ராசாக்களா.

ஷூட்டிங் ஸ்பாட்டில் காஸ்ட்லியான கேரவன் வேன்தான் வேணும் என்றாராம். சரி தொலையுதுன்னு ஏற்பாடு பண்ணினாராம் தயாரிப்பாளர். அந்தக் கேரவனில் ராய் லட்சுமியும் அவரது ஃப்ரெண்டும் (ஆணா- பெண்ணான்னு தெரியல) ஜாலி அரட்டையில் பின்னி எடுப்பார்களாம்.

ராய் லட்சுமிக்கும் அவரது உதவியாளர்களான மேக்-அப் மேன், டச்-அப் கேர்ள், பெர்சனல் அசிஸ்டென்ட் ஆகியோருக்கும் தினசரி பேட்டாவே ஆளுக்கு 30 ஆயிரம் கொடுத்துரணுமாம். சென்னை- மகாபலிபுரம் ஏரியாவில் ஷூட்டிங் நடத்தி முடிப்பதற்குள் தயாரிப்பாளருக்கு தாவு தீர்ந்து போச்சாம்.

Advertisment
cine220119
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe