Advertisment

ஸ்ரீதேவியாக ரகுல் பிரீத்

/idhalgal/cinikkuttu/rahul-breathe-sridevi

ந்திய சினிமாவில் சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வருவது ட்ரென்டாக மாறியுள்ளது. "டர்ட்டி பிக்சர்ஸ்' படம்மூலம் ஆரம்பித்த இந்த ட்ரென்ட் தற்போது 'நடிகையர் திலகம்' படம்வரை தொடர்ந்து வந்த

ந்திய சினிமாவில் சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வருவது ட்ரென்டாக மாறியுள்ளது. "டர்ட்டி பிக்சர்ஸ்' படம்மூலம் ஆரம்பித்த இந்த ட்ரென்ட் தற்போது 'நடிகையர் திலகம்' படம்வரை தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையே இந்திய சினிமாவின் 80-களில் கொடிகட்டிப் பறந்து, பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் மர்மமான முறையில் இறந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க தற்போதுள்ள நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக் கும் நிலையில் ஸ்ரீதேவியாக நடிக்கும் வாய்ப்பை நடிகை ரகுல் பிரீத் சிங் தட்டிச் சென்றுள்ளார்.

Advertisment

sridevi-daughter

ஆனால் முழு நீளப் படத்துக் காக அல்லாமல் தெலுங்கில் உருவாகும் என்.டி.ஆர் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத் சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் என்.டி.ஆர் மகன் பாலகிருஷ்ணா என்.டி. ஆராகவும், அவரது மனைவியாக வித்யாபாலனும் நடிக்க இருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடிக்கிறார்.

படத்தின் முதற்கட்ட படப் பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe