காஞ்சனா-3 (முனி-4) படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் செம பிஸியாக இருக்கிறார் ஹீரோவும் டைரக்டருமான ராகவா லாரன்ஸ். ஏப்ரல் கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் பண்ணும் மும்முரத்தில் இருக்கும் ராகவா லாரன்சின் தலை யில் இடியாய் இறங்கியுள்ளது சமீபத்தில் ரிலீசாகி பஞ்சரான 90 எம்.எல். காஞ்ச னா-3-க்கும் 90 எம்.எல்.லுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குறீகளா? இருக்கே சம்பந்தம் இருக்கே.

l

விஜய் டி.வி.யில் வந்த பிக்பாஸால் எல்லாத் திசைகளிலும் ஓவியாவின் கொடி பட்டொளி வீசிப்பறந்தது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் பல டைரக்டர் களும் தயாரிப்பாளர்களும் ஓவியாவைத் துரத்தினார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் சமாளிக்க முடியாமல், செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவானார் ஓவியா.

Advertisment

ஒரு வழியாக கோலிவுட்டுக்குத் திரும்பிய ஓவியா, தன்னை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய டைரக்டர் சற்குணத்தின் ‘களவாணி-2’வில் சம்பளம் பேசாமல் நடித்தார். ஓவியாவுக்கு இருக்கும் கரண்ட் ஸ்டேட்டசை விட்டுவிடக் கூடாது என நினைத்த ராகவா லாரன்ஸும் ‘காஞ்சனா-3’-யில் கமிட் பண்ணினார்.

காஞ்சனா-3-யின் 90% படப்படிப்பு முடிந்து ரிலீசுக்குத் தயாராகும் நிலையில் தான் எக்குத்தப்பாக வும் ஏடாகூடமாகவும் ஓவியா நடித்த ’90 எம்.எல்.’ ரிலீசாச்சு. படத்தின் ரிசல்ட்டும் பப்பட மாகிப் போச்சு.

படத்தைப் பார்த்த ராகவா லாரன்ஸுக்கு கிறுகிறுத்துப் போச்சு. அடி ஆத்தீ இந்தப் பொண்ணு என்ன இப்படி நடிச்சித் தொலைச்சிருக்கு. காஞ்சனா-3-ங்கிறது எப்படிப்பட்ட பக்தி, அமானுஷயப் படம். இந்த ஓவியாவின் 90 எம்.எல்.இமே ஜால் நம்ம படமும் டேமேஜாகிடுமே என கவலைப்படும் ராகவா லாரன்ஸ், ஓவியா வின் போர்ஷனைக் குறைத்துவிட்டு, இன்னொரு ஹீரோ யினை வைத்து ரீ ஷூட் பண்ணலாமா, பண்ணினால் சரிப் பட்டு வருமா என பலவாறு யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

Advertisment