மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரித்து, அவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த தனா இயக்கும் "வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்த அனுபவங் களைப் பற்றி சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் பேசுகிறார்கள்...
""அண்மையில் சிலகாலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தேன். இயக்குநர் தனா இந்தப் படத்தின் கதையை எங்கள் இருவருக்கும் கூறினார்.
கதையைக் கேட்டதும் இருவருக்கும் பிடித் திருந்தது. மண் மணம் மாறாமல் ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய சம்பவங்கள், வெற்றி- தோல்விகள் ஆகிய வற்றை எப்படி சந்திக் கின்றார்கள் என்பதுதான் படத்தின் கதை. இதில் நடிப் பதில் எங்கள் இரு வருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி.
ஆரோக்கியம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். ஆகையால், உடலை ஆரோக்கியமாகப் பார்த்துகொள்ள தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று என் தந்தை கூறியதை நான் பின்பற்றி வருகிறேன். அது தான் நான் சுறுசுறுப்பாக இயங்கக் காரணம்.
ராதிகாவிடம் கோபம் மட்டும்தான் பிடிக்காத விஷயம். அதைத் தவிர மற்ற அனைத்து விஷயங்களும் பிடிக்கும். கோபத்தை உடனே வெளிப்படுத்தக் கூடாது என்பது எனது கருத்து'' என்கி றார் சரத்.
""நாங்கள் இருவருமே, செய்கின்ற வேலையை விருப்பத்துடன் செய்கி றோம். ஆகையால்தான் பல துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்த முடிகிறது. தனா கூறிய கதையைக் கேட்டதும் எங்கள் இருவருக்குமே பிடித்துவிட்டது. படப்பிடிப்பு நடத்திய விதமும், கதாபாத்திரங்கள் அமைந்த விதமும் மிக அழகாக இருக்கிறது. இப்படத்தில் சரத் குமார் கதாபாத்திரம் தீவிரமானதாக இருக்கும்.
பொதுவாக நான் மாலை 6 மணிக்குமேல் பணியாற்ற மாட்டேன். ஞாயிற்றுக்கிழமை களிலும் பணியாற்றமாட் டேன். ஆனால், இந்தப் படத்தில் விதிவிலக்காக மாறிவிட்டது. இயக்குநர் தனாவைப் பொருத்தவரை கதை எப்படி இருக்க வேண்டும் அதை எப்படி காட்சிப்படுத்த வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார். தேவையில்லாத காட்சிகளை எடுத்து நேரத்தை வீணடிக்கமாட்டார்.
சரத்குமார் அருமையான மனிதர் மற்றும் அவருடைய விடா முயற்சி இரண்டும் அவரிடம் பிடித்த விஷயம்.
தானம் செய்வது அதிலும், உண்மையாகவே உதவி கேட் கிறார்களா என்று ஆராயாமல் செய்வது பிடிக்காது'' என்கிறார் ராதிகா.