Advertisment
/idhalgal/cinikkuttu/queen-happy

டிடி தளமான எம்.எக்ஸ். பிளேயர் ஆச்சரியப்படத்தக்க வகையிலான பிரம்மாண்டங்களை தரத் தயாராகி வருகிறது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனும், "கிடாரி' படத்தை இயக்கிய பிரசாத் முருகேசனும் ஒன்றிணைந்து "குயின்' என்று பெயரிடப்பட்ட இணைய தள தொடர் ஒன்றை வழங்கவிருக்கின்ற னர். ஜெயலலிதாவின் வாழ்க்கையை விவரிக்கும் இந்த இணையத் தொடர் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பும், முதல் எ

டிடி தளமான எம்.எக்ஸ். பிளேயர் ஆச்சரியப்படத்தக்க வகையிலான பிரம்மாண்டங்களை தரத் தயாராகி வருகிறது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனும், "கிடாரி' படத்தை இயக்கிய பிரசாத் முருகேசனும் ஒன்றிணைந்து "குயின்' என்று பெயரிடப்பட்ட இணைய தள தொடர் ஒன்றை வழங்கவிருக்கின்ற னர். ஜெயலலிதாவின் வாழ்க்கையை விவரிக்கும் இந்த இணையத் தொடர் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பும், முதல் எபிசோட் திரையிடலும் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்றது.

Advertisment

இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், ""உண்மையில் நான் மிகவும் அனுபவித்து இந்தப் பணி யைச் செய்தேன். காரணம் காலக் கட்டுப் பாடு எதுவும் இதில் இல்லை. மேலும் இந்த ஓடிடி தளமே, கதை சொல்லுவதற் கேற்ற சரியான வடிவம் என்று நினைக்கி றேன். முதல் சீசன் பதினோரு பாகங்களாக ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இப்போது இரண்டாம் சீசனுக்கான பணி களைத் தொடங்கிவிட்டோம் என்றார்.''

qq

இயக்குநர் பிரசாத் முருகேசன் பேசுகையில், ""ரேஷ்மா கட்டாலா எழுதிய இந்த ஸ்க்ரிப்ட்தான் நாங்கள் இதை வலைதளத் தொடராக்க முக்கியக் காரணமாக அமைந் தது. இந்த ஸ்க்ரிப்டைப் படித்ததுமே இதன் காட்சி வடிவம் எப்படியிருக்கும் என்பதை சுலபத்தில் என்னால் உணரமுடிந்தது'' என்றார் நடிகை விஜி சந்திரசேகர் பேசும் போது ""சூர்யா என்ற வேடத்தில் இதில் நான் நடிக்கிறேன். இத் தொடரில் நானும் ஒரு பங்காக இருப் பது குறித்து மிகவும் மகிழ்ச்சி யடைகிறேன். இந்தப் புதுமையான அனுபவத்துக்காக நானும் ஆவலோடு இருக்கிறேன்'' என்றார்.

Advertisment

அஞ்சனா பேசும்போது, ""சக்தி வேடத்தில் நான் நடித்த பகுதி எனக்கு உள்ளார்ந்த உந்து சக்தியாக இருந்தது'' என்றார் ஜெ. வேடத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் தனது உரையின்போது, ""இந்த ஸ்க்ரிப்டும், பாத்திரப் படைப்புகள் உருவாக்கப்பட்ட விதமும் மிகவும் ஈர்க்கத் தக்கதாக இருந்தது'' என்றார்.

"" "குயின்' தொடரை ஒளிபரப்ப தடை இல்லை'' என சென்னை உயர் நீதிமன்றம் கூறிவிட்டதால், பிரசாத் முருகேசனும் கௌதம் மேனனும் செம ஹேப்பி! டிசம்பர் 14 முதல் எம்.எக்ஸ். பிளேயரில் "குயின்' தொடர் ஒளி பரப்பாகத் தொடங்கி விட்டது.

cini241219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe