"அண்ணனுக்கு ஜே' திரைப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிலிம் கம்பெனியும், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. அறிமுக இயக்குநரான ராஜ்குமார் இயக்கியுள்ளார். இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர்.

கதநாயகனாக தினேஷ்.

Advertisment

magima

இவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார். ராதாரவி, மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அர்ரோல் கொரளி இசை அமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவாளராக இப்படத்தில் அறிமுகமாகி உள்ளார். எடிட்டிங் ஏ.இ. வெங்கடேஷ்.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஹீரோயின் மஹிமா நம்பியார் பேசும்போது, ""வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குனரின் தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பது சந்தோஷமாகவுள்ளது.இந்தப் படத்தில் தர லோக்கல் கதாபாத்திரத் தில் மேக்கப் இல்லாமல் நடித்துள் ளேன். எனது சொந்த குரலிலில் டப்பிங் பேசியுள்ளேன்'' என்றார்.

""இயக்குநர் ராஜ்குமார் நல்ல படத்தைத் தந்துள்ளார். படம் வெற்றி அடைய வாழ்த்துகள்'' என்றார் வெற்றிமாறன்.