ஷ்மி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு "பெட்டிக்கடை' என்று பெயரிட்டுள்ளனர்.online

இந்தப் படத்தில் சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார் சமுத்திரகனி.

இன்னொரு நாயகனாக "மொசக் குட்டி' வீரா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக வர்ஷா நடிக்கிறார் கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார்.

இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள்.

Advertisment

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரிக்கிறார் இசக்கி கார்வண்ணன்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

விழாவில் பாரதிராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சமுத்திரகனி, வீரா இயக்குநர் இசக்கி கார்வண்ணன், இசையமைப்பாளர் மரியா மனோகர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பாடலாசிரியர் மறத்தமிழ் வேந்தன் ஆகியோரும் பங்குபெற்றனர்.

Advertisment

விழாவில் பேசிய இயக்குநர் இசக்கி கார்வண்ணன்- ""இது எனக்கு முதல் படம். முதல் படத்தில் அழுத்தமான ஒரு பதிவை பதிக்கவேண்டும் என்பதற்காக இந்தக் கதையைத் தொட்டிருக்கிறேன். பெட்டிக்கடைக்கும் நமக்குமான தொடர்பு உணர்வு சங்கிலியாய், உறவு சங்கிலியாய்த் தொடர்கிறது. சூப்பர் மார்க்கெட், ஆன்லைன் என்கிற கார்ப்பரேட் மாயை எப்படி பெட்டிக் கடையைக் காலியாக்கி இருக்கிறது என்கிற கருத்தை இதில் பதிய வைத்திருக்கிறேன்'' என்றார்.