சிக்கிக்கிட்ட ஜாக்குலின்!

/idhalgal/cinikkuttu/punctuated-jacqueline

சில தினங்களுக்கு முன்னர் ஷாரூக்கானின் அலுவலகத்திற்கு சென்றார் ஜாக்குலின் பெர்னாண்டஸ். செய்தியாளர்கள் அதுபற்றி கேட்டபோது "தவறுதலாக சென்றேன்' என்று சர்வசாதாரணமாக பதிலளித்தார். ஆனால், இதையே அவர் சல்மான் கானிடமும் சொல்வாரா என பாலிவுட்

சில தினங்களுக்கு முன்னர் ஷாரூக்கானின் அலுவலகத்திற்கு சென்றார் ஜாக்குலின் பெர்னாண்டஸ். செய்தியாளர்கள் அதுபற்றி கேட்டபோது "தவறுதலாக சென்றேன்' என்று சர்வசாதாரணமாக பதிலளித்தார். ஆனால், இதையே அவர் சல்மான் கானிடமும் சொல்வாரா என பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கத் தொடங்கியிருக்கின்றன.

jacqulin

எப்போதும் பிஸியாக இருக்கும் ஷாரூக்கானின் கைவசம் இருக்கும் படங்களில் தனக்கும் வாய்ப்பு கேட்டு ஜாக்குலின் சென்றிருக்கலாம். இந்தத் தகவல் யாருக்கும் தெரியாது என்றுகூட அவர் நினைத்திருக்கலாம். ஏனென்றால், அப்படியொரு முயற்சியில் ஜாக்குலின் இறங்குகிறார் என்ற தகவல் சல்மான்கான் காதுகளில் விழுந்தால், அது அத்தனை சுவாரஸ்யமாக இருக்காது. ஒருவேளை ஷாரூக்கானிடம் வாய்ப்பைப் பெற்றபிறகு அதை உலகிற்கு அறிவிக்கலாம் என்று ஜாக்குலின் நினைத்திருக்கலாம். ஆனால், காலம் கனிவதற்கு முன்பே அந்த சந்திப்பை பிழை என்று சொன்னதால், சல்மான் மற்றும் ஷாரூக் ஆகிய இருவரிடத்திலும் இனி ஜாக்குலின் வாய்ப்பைப் பெறமுடியாது என்ற தகவல் கசிகிறது.

கான் நடிகர்கள் தங்கள் படங்களில் நடிக்கும் நடிகைகளை விட்டுக்கொடுக்காத மாபெரும் கொள்கையோடு இருக்கின்றனர். ஷாரூக்கானின் "டான்' படத்தில் நடித்தபிறகு சல்மான்கான் பிரியங்கா சோப்ராவை படவாய்ப்புக்காக அலைக்கழித்த கதை ஊரறிந்ததுதானே! பாவம் ஜாக்குலினுக்கு தெரியாமல் போனதோ என்னமோ?!

இதையும் படியுங்கள்
Subscribe