Advertisment
/idhalgal/cinikkuttu/promotion

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் "2.0' படத்தில் உதவியாளராகப் பணிபுரிந்திருக்கும் விக்னேஷ் குமார், "மேகம் செல்லும் தூரம்' என்ற வீடியோ பாடலை இயக்கியிருக்கிறார். அந்த வீடியோ பாடலை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அவரே நடித்திருக்கிறார். கதாநாயகியாக பிரவாளிகா நடித்திருக்க

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் "2.0' படத்தில் உதவியாளராகப் பணிபுரிந்திருக்கும் விக்னேஷ் குமார், "மேகம் செல்லும் தூரம்' என்ற வீடியோ பாடலை இயக்கியிருக்கிறார். அந்த வீடியோ பாடலை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அவரே நடித்திருக்கிறார். கதாநாயகியாக பிரவாளிகா நடித்திருக்கிறார்.

Advertisment

shankar

புகைப்படக் கலைஞராக வேண்டுமென அதீதமான ஈடுபாட்டுடன் இருக்கும் இளைஞன், காதல் மற்றும் குடும்பம் குறித்து எந்தவிதமான பிரக்ஞையுமே இல்லாமல் இருக்கிறான். தனது குறிக்கோளுக்காக ஒரு கட்டத்தில் காதலையே உதறி, பின்னால் ஒரு நீண்ட நெடிய பயணத்தின் இறுதியில் வாழ்க்கை, அன்பு, குடும்பம் இவற்றின்மீதான மதிப்புகளை உணர்ந்து கொள்கிறான். இதுவே "மேகம் செல்லும் தூரம்' வீடியோ பாடலின் சாராம்சம்.

Advertisment

இந்தப் பாடலை படமாக்குவதற்காக ஒளிப்பதிவாளர் ஆர்.வி. சரண், உதவி இயக்குநர் விக்னேஷ்ராஜ் மற்றும் விக்னேஷ் குமார் ஆகியோர் அடங்கிய மூன்றுபேர் குழு மட்டுமே இமாச்சல்பிரதேஷ், ராஜஸ்தான், நீலகிரி ஆகிய இடங்களுக்குப் பயணித்திருக்கிறது. மேலும் சில காட்சிகள் சென்னையிலேயே படமாக்கப் பட்டிக்கின்றன.

இந்தப் பாடலின் ஒளிப்பதிவாளர் ஆர்.வி. சரண் "ஒரு கிடாயின் கருணை மனு', "விழித்திரு' ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

promotions

மேலும் இந்த வீடியோ பாடலை மஹாலட்சுமி தியேட்டர்ஸ் உரிமையாளர் ஷைலேந்தர் சிங் தயாரித்திருக்கிறார்.

இந்த வீடியோப் பாடலை நடிகர்கள் விஷால், உதயநிதி, சசிகுமார், டைரக்டர் கௌதம் மேனன் ஆகியோர் மனம் திறந்து பாராட்டியுள்ளனர்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe