சமூக கருத்தாக்கங்கள் நிரம்பியுள்ள படங்களை கமர்ஷியலாக கொடுத்துவரும் இயக்குநரான எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் "மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்துவரும் படம் "லாபம்.' இப்படத்தை விஜய்சேதுபதி புரொடக்ஷனும், 7சிஎஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
மிகப்பெரிய பட் ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி. இமான் இசையமைக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/danshika_0.jpg)
இப்படத்தின் இன்னொரு லாபகரமான செய்தி என்னவென்றால், நடிகை சாய் தன்ஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வுள்ளார். படத்தில் அவரது கதாபாத்திரமும் தோற்றமும் இப்படத்தில் புதுமையாக இருக்குமாம். குறிப்பாக, படத்தில் அவரது தோற்றத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்து கொண்ட தன்ஷிகா படம் பற்றி மேலும் கூறியதாவது, ""ஜனநாதன் சாரின் படங்கள் வெறும் கமர்ஷியல் அம்சத்தோடு நின்றுவிடுவதில்லை. அதைத் தாண்டிய சமூக சிந்தனை அவரது படத்தில் இருக்கும். லாபமும் அப்படியான படம்தான். விவசாயிகளின் வாழ் நிலையைப் பேசுவதோடு வெள்ளையர்கள் காலத்தில் இருந்து நம் விவசாய மக்களின் உழைப்பு எப்படி யெல்லாம் சுரண்டப் படுகிறது என்பதை படம் அழுத்தமாகப் பேசுகிறது.
அன்று விவசாயி களுக்கு எதிராகப் போடப்பட்ட விதை இன்றுவரையிலும் எப்படி வளர்ந்துள்ளது என்பதை மிக அற்புதமாக படம் பேசும். இப்படத்தில் நான் நடிக்க வேண்டுமென்று ஜனநாதன் சார் சொல்லவும், கதையே சொல்லவேண்டாம் சார் என்றேன். ஏனென்றால் அவர்மீது எனக்கு அத்தகைய நம்பிக்கை. சினிமாவிற்கான அரிச்சுவடியைக் கற்றுக் கொண்டதே அவரிடம் இருந்துதான்.
"பேராண்மை' படத்தில் எப்படி ஒரு மாணவிபோல அவரிடம் கற்றுக்கொண்டே னோ அதேபோல் இந்த "லாபம்' படத்திலும் கற்று வருகிறேன். "பேராண்மை' படத்தில் நான் நடித்ததற்கும் இப்படத்தில் நடிப்பதற்கும் இடையில் எனக்குள்ள நம்பிக்கை லெவல் கூடி இருப்பதை உணரமுடிகிறது. இப்போதெல்லாம் என்னு டைய சினிமா பார்வையை ஸ்பாட்டில் சொல்லும் தைரியம் எனக்குள் வந்திருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/danshika1_0.jpg)
அதற்கான காரணம் ஜனநாதன் சார் தரும் உற்சாகம். அவர் நம்மிடையே நிறைய விஷயங் களை ஷேர் பண்ணுவார்.
அதேபோல் நாம் சொல்லும் விஷயங்களை கவனமாக கேட்பார். சரியாக இருந்தால் அதை கன்சிடர் பண்ணுவார்.
அவர் இயக்கிய எல்லா படங்களும் எனக்கு விருப்பமான படங்கள்தான். இப்படத்தில் விஜய் சேதுபதியை மக்களுக்கு ரொம்பப்பிடிக்கும். ""எனக்கு எது சரின்னு படுகிறதோ அதைச் செய்துவருகிறேன் என்று வெளிப்படையாகச் சொல்லும் நேர்மையாளர் அவர். "லாபம்' படத்தை தியேட்டரில் வந்து பார்க்கும் போது உங்கள் மனதில் தோன்றும் வார்த்தை இது வாகத்தான் இருக்கும். ""இப் படம் சமூகத்திற்கான லாபம்'' - இவ்வாறு தன்ஷிகா கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-08/danshika-t.jpg)