Advertisment

ஒரு தயாரிப்பாளரின் கண்ணீர்க்கதை!

/idhalgal/cinikkuttu/producers-tears-story

புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து 'ஔடதம்' படத்தின் தயாரிப்பாளர் சொன்னது திரைப்படத்தை மிஞ்சும் கதையாக இருக்கிறது.

Advertisment

இப்படத்தைத் தயாரித்த நேதாஜி பிரபு ஒரு சிறிய தயாரிப்பாளர்..அவரே கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துத் தயாரித்த படம்தான் "ஔடதம்'.

இந்தியாவின் குடும்ப வியாதி என்று சொல்லத்தக்க- எழுபது மில்லியன் மக்கள் பாதிக்கப்

புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து 'ஔடதம்' படத்தின் தயாரிப்பாளர் சொன்னது திரைப்படத்தை மிஞ்சும் கதையாக இருக்கிறது.

Advertisment

இப்படத்தைத் தயாரித்த நேதாஜி பிரபு ஒரு சிறிய தயாரிப்பாளர்..அவரே கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துத் தயாரித்த படம்தான் "ஔடதம்'.

இந்தியாவின் குடும்ப வியாதி என்று சொல்லத்தக்க- எழுபது மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சர்க்கரை வியாதிக்கான மாத்திரை தயாரிப்பில் நடைபெறும் சமூக விரோத நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் திரைப்படம் தான் "ஔடதம்.'

p

Advertisment

""கஷ்டப்பட்டு ஒரு திரைப்படத்தை எடுத்து முடித்து வைத்திருக்கும் புதிய தயாரிப்பாளர் ஒருவரைக் கபளீகரம் செய்து, அப்படத்தைத் தனதாக்கிக்கொள்ளும் ஒரு ஏமாற்று வேலை சமீபகாலமாக தமிழ்த் திரை உலகில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில்தான் "ஔடதம்' திரைப்படத்திற்குள்ளும் எஸ். அஜ்மல்கான் என்பவர் தலைமையில் ஒரு குரூப் உள்ளே நுழைந்து தங்கள் ஆட்டத்தைத் தொடங்கினர்.

ஒரு ஏமாற்று புரிந்துணர்வு ஒப்பந்த (ஙஞம) அடிப்படை யில் மூன்று மாதத்திற்குள் படத்தை வெளியிடுவதாகவும், அதற்குள் பேசிய தொகை யைக் கொடுத்துவிடுவதாகவும் ஒப்புக்கொண்டு, பணத்தையும் கொடுக்காமல் பல மாதங்களாக டிமிக்கி கொடுத்தனர்.

இந்த சமயத்தில்தான் கோடிகளில் ரூபாயைக் கொடுத்து படத்தை வாங்கி யுள்ளதாகப் பொய்ப்பத்திரங் கள் தயார் செய்து, படம் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி மேற்படி அஜ்மல்கான் கோஷ்டியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கிவிட்டனர்.

நான் அளித்திருந்த லைசென்ஸ் போட்டோ காப்பியில் உள்ள அட்டஸ் டேஷன் கையெழுத்துக்கு மேல் கோடிகளில் ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக எழுதி நீதிமன்றத்தில் காட்டியுள்ளனர். இப்படிப்பட்ட கிரிமினல் வேலைகள் நடப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதன்முறை..

எத்தனையோ போராட்டங்களுடன் படத்தை எடுத்து முடித்த நான் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசரிடம் எனது பக்கத்தின் நியாயங்களை எடுத்துச் சொல்லி கடந்த நான்கு மாதங்களாகப் போராடி, இப்பொழுது வெற்றி பெற்றிருக்கிறேன்.

என நம்மிடம் சொல்லி கண்ணீர்விட்டார் தயாரிப்பாளர் நேதாஜிபிரபு.

cine300419
இதையும் படியுங்கள்
Subscribe