டிகை ஆன்ட்ரியா, அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் "மாளிகை.' சாந்தி பவானி என்டர்டெயின் மென்ட் சார்பாக கமல்போரா, ராஜேஷ்குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில். சத்யா.

Advertisment

a

இப்படத்தின் டீசர் வெளியீட்டுவிழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் இயக்குநர் தில். சத்யா பேசும்போது,

Advertisment

""இந்தப்படத்தை இயக்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் எனக்கு இது முதல் படம். இந்தப்படத்தில் ஆன்ட்ரியா ஆங்கிலப் பட நாயகியைப்போல் நடித்துள்ளார்'' என்று ஆன்ட்ரியா புகழ் பாடினார்.

ad

""இந்தப்படம் முதலில் கன்னடத்தில் பண்ண வேண்டிய படமாகத்தான் இருந்தது. "ஆன்ட்ரியாவிற்கு தமிழில் மார்க் கெட் இருக்கு. அதனால், தமிழில் எடுக்க வேண்டும்' என்று தயாரிப்பாளர் சொன்னார்.

Advertisment

ஒரு இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குநர் இருவருக்கும், எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்று தோன்றியிருப்பது மகிழ்ச்சி. ஆனால் இங்கிருப்பவர்களுக்கு ஏதும் தோன்றவில்லை'' என்று பொங்கித் தீர்த்தார் "மாளிகை'-யின் நாயகி ஆன்ட்ரியா.

ad

இப்படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ள இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேசும்போது,

""ஆன்ட்ரியா திறமையானவர். நடனம், பாட்டு, நடிப்பு என பன்முகத் திறமை அவரிடம் உண்டு. அவர் நடித்த "தரமணி' படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப்போல் இந்தப்படத்திலும் நன்றாக நடித்திருக்கிறார்'' என்றார்.

kas

""சகலகலாவல்லி ஆன்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப்படத்திலும் அவர் கலக்கி இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப்படத்தின் இயக்கு நருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்'' என்றார் விஜய் ஆண்டனி.

"மாளிகை'-யின் ஹீரோயினான ஆன்ட்ரியா பட்டுப் புடவை, முழுக்கை ஜாக்கெட்டுடன் வருவார் என்று முன் கூட்டியே தயாரிப் பாளர் கமல் போராவுக் குத் தெரியும்போல, அதனால்தான் பெங்களூரிலிருந்து ரிச்கேர்ள்ஸ்களை இம்போர்ட் பண்ணி, விழா நடந்த சென்னை க்ரீன் பார்க் ஓட்டலையே கிளுகிளுக்க வைத்தார். காம்பியரிங் கஸ்தூரியும் செம கலக்கலான காஸ்ட்யூமில் கலக்கினார்.