Advertisment

போராட்டத்தில் இறங்குவோம் -தயாரிப்பாளர் எச்சரிக்கை!

/idhalgal/cinikkuttu/producer-warning

"தேர்ட் ஐ' கிரியேஷன்ஸ் சார்பில்' எம்.டி. விஜய் தயாரிப்பில், எம்.டி. ஆனந்த் இயக்கி, "அட்டு' நாயகன் ரிஷி ரித்விக், நாயகி ஆஷா நடிப்பில் உருவாகியுள்ள 'மரிஜுவானா' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நடை பெற்றது.

Advertisment

விழாவில் தயாரிப்பாளர் எம்.டி. விஜய் கஞ்சா என்பதன் அறிவியல் பெயர

"தேர்ட் ஐ' கிரியேஷன்ஸ் சார்பில்' எம்.டி. விஜய் தயாரிப்பில், எம்.டி. ஆனந்த் இயக்கி, "அட்டு' நாயகன் ரிஷி ரித்விக், நாயகி ஆஷா நடிப்பில் உருவாகியுள்ள 'மரிஜுவானா' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நடை பெற்றது.

Advertisment

விழாவில் தயாரிப்பாளர் எம்.டி. விஜய் கஞ்சா என்பதன் அறிவியல் பெயர்தான் மரிஜுவானா. கஞ்சா போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்து வதால் பள்ளிக் குழந்தைகளும், இளைஞர்களும் எந்தளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இப்படத்தில் கூறியிருக்கிறோம்.

pp

நாயகன் ரிஷி ரித்விக் இப்படத்தின் கதையைக் கேட்டதும் சமுதாயத்திற்கு சிறந்த கருத்தைக் கூறும் படமாக இருந்தது. ஆகையால், எனக்கு சம்பளம் வேண்டாம்; நான் நடிக்கிறேன் என்று கூறினேன்.

கதாநாயகி ஆஷா இயக்குநர் மிகவும் வித்தியா சமானவர். எங்களை எங்கள் போக்குக்கு நடிக்க விட்டுவிட்டு, தவறு இருக்குமிடத்தில் மட்டும் சரிசெய்வார். ஒவ்வொரு காட்சியில் நடிக்கும்போதும் ரிஷி "பயப்படாதீர்கள்' என்று கூறிக்கொண்டிருப்பார்.

தயாரிப்பாளர் கே. ராஜன் மம்முட்டிபோல் அனைவரும் அவரவர் செலவில் கேரவன் வைத்துக்கொள்ள வேண்டும். தயாரிப்பாளருக்கு வரும் வருமானத்தில் 10% வரி கட்ட வேண்டும். விநியோகஸ்தர் களும் 10% வரி கட்ட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், மாநில அரசு வைத்திருக்கும் 8% வரியை நீக்கச் சொல்லி கோரிக்கை வைக்கவிருக்கிறோம். மத்திய அரசு சினிமாத் துறையை நசுக்குகிறது. இது தொடர்ந் தால், நாங்கள் போராட்டத் தில் இறங்குவோம். இயக்குநர் மிஷ்கின் இதுபோன்ற நல்ல கருத்தைக் கூறும்- குறைந்த பொருட்செலவில் எடுக்கும் படங்கள் வெற்றி பெறவேண்டும்.

இயக்குநர் எம்.டி. ஆனந்த் இது எனக்கு முதல் மேடை. அதுவும் பெரிய மேடை. நான் இங்கு நிற்பதற்கு காரணம் என் அம்மா. அதிக அளவு போதை ஒரு மனிதனின் வாழ்வை எப்படி பாதிக் கிறது என்பதைதான் இப்படத்தில் கூறியிருக் கிறேன்.

cini030320
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe