பிரியா பவானி சங்கர் சான்ஸ் "ரகசியம்' இந்துஜா டென்ஷன்!

/idhalgal/cinikkuttu/priya-bhavani-shankar-chance-secret-hinduja-tension

சென்னையைச் சேர்ந்த உண்மைத் தமிழச்சி பிரியா பவானி சங்கர். பி.எஸ். அப்துர் ரஹ்மான் கல்லூரியில் எம்.பி.ஏ. படிப்பை முடித்துவிட்டு, "புதிய தலைமுறை' தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்களுக்கு அறிமுகமானார்.

பிரியா பவானியின் அழகும், செய்தி வாசிக்கும்போது இவரின் தமிழ் உச்சரிப்பும் செய்திப் பிரியர்களைத் தாண்டி அனைவரையும் கவர்ந்தது. இரண்டு வருடங்கள் செய்தி வாசிக்கும் பணியிலிருந்துவிட்டு, அதன்பின் டி.வி. சீரியல்களில் நடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

dd

பிரியாவின் முதல் டி.வி. சீரியலான "கல்யாணம் முதல் காதல் வரை' விஜய் டி.வி.யி.ல் ஒளிபரப்பானது. சீரியல் நடிப்பிலும் அனைவரையும் கவர்ந்தார். இவரின் துறுதுறு அழகு, பளீர் சிரிப்பு, குழந்தைப் பேச்சு இவற்றையெல்லாம் பார்த்த டைரக்டர் ரத்னகுமார் (இப்போது ரிலீசாகியிருக்கும் அமலா பாலின் "ஆடை' டைரக்டர்தான்) தனது "மேயாத மான்' படத்தில் அறிமுகப்படுத்தினார்.

2017-ல் ரிலீசானது இப்படம். அதே படத்தில்தான் இந்துஜாவும் அறிமுகமானார்.

"மேயாத மான்' பிரியா பவானி சங்கர் என யாரும் அழைப்ப தில்லை. ஆனால் இந்துஜாவை "மேயாத மான்' இந்துஜா என்றால் எ

சென்னையைச் சேர்ந்த உண்மைத் தமிழச்சி பிரியா பவானி சங்கர். பி.எஸ். அப்துர் ரஹ்மான் கல்லூரியில் எம்.பி.ஏ. படிப்பை முடித்துவிட்டு, "புதிய தலைமுறை' தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்களுக்கு அறிமுகமானார்.

பிரியா பவானியின் அழகும், செய்தி வாசிக்கும்போது இவரின் தமிழ் உச்சரிப்பும் செய்திப் பிரியர்களைத் தாண்டி அனைவரையும் கவர்ந்தது. இரண்டு வருடங்கள் செய்தி வாசிக்கும் பணியிலிருந்துவிட்டு, அதன்பின் டி.வி. சீரியல்களில் நடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

dd

பிரியாவின் முதல் டி.வி. சீரியலான "கல்யாணம் முதல் காதல் வரை' விஜய் டி.வி.யி.ல் ஒளிபரப்பானது. சீரியல் நடிப்பிலும் அனைவரையும் கவர்ந்தார். இவரின் துறுதுறு அழகு, பளீர் சிரிப்பு, குழந்தைப் பேச்சு இவற்றையெல்லாம் பார்த்த டைரக்டர் ரத்னகுமார் (இப்போது ரிலீசாகியிருக்கும் அமலா பாலின் "ஆடை' டைரக்டர்தான்) தனது "மேயாத மான்' படத்தில் அறிமுகப்படுத்தினார்.

2017-ல் ரிலீசானது இப்படம். அதே படத்தில்தான் இந்துஜாவும் அறிமுகமானார்.

"மேயாத மான்' பிரியா பவானி சங்கர் என யாரும் அழைப்ப தில்லை. ஆனால் இந்துஜாவை "மேயாத மான்' இந்துஜா என்றால் எல்லாருக்கும் தெரியும். தனது முதல் படமான "மேயாத மானி'-ல் வைபவ்விற்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியா பவானி.

2018-ல் ரிலீசான "கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கார்த்தியின் அக்கா மகளாக நடித்திருந்தார் பிரியா பவானி சங்கர்.

அந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி சாயிஷா சைகல் என்றாலும், க்ளைமாக்ஸ்வரை; தனது நடிப்பால் அசத்தி யிருப்பார் பிரியா பவானி. "கடைக்குட்டி சிங்க'-த்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டால் ஹிட் சென்டிமென்ட் ஹீரோயின் லிஸ்டில் இடம்பெற்றார் பிரியா பவானி. 2018-ன் பிற்பகுதியில் வெங்கட் பிரபு தயாரிப்பில், சிம்புதேவன் டைரக்ஷனில் "கசடதபற' படத்தில் கமிட் ஆனார். இப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்து ரிலீசுக்குத் தயாராக உள்ளது.

"கசடதபற' நடித்துக் கொண்டிருக்கும்போதே, எஸ்.ஜே. சூர்யாவுடன் "மான்ஸ்டர்' படத்தில் ஜோடி போட்டார் பிரியா. நெல்சன் வெங்கடேசன் டைரக்ட் பண்ணிய இந்தப் படமும் ஹிட்டானது.

அருண் விஜய்யுடன் "மாஃபியா', படம், ஜீவா- அருள்நிதி சேர்ந்து நடிக்கும் பெயரிடப்படாத படம் என வரிசையாக கமிட்டாகி செம பிஸியான ஹீரோயினாகிக் கொண்டிருந்தபோதுதான், பிரியா பவானிக்கு மிகமிகப் பெரிய சந்தோஷ ஷாக் நியூஸ் கிடைத்தது.

hh

லைக்கா சுபாஷ்கரன்- கமல்- ஷங்கர் காம்பினேஷன் தயாரிப்பில் உருவாகும் மிகப்பிரம்மாண்ட படைப்பான "இந்தியன் -2'-வில் கமிட் ஆகியிருப்பதுதான் பிரியா பவானிக்கு கிடைத்த சந்தோஷ ஷாக் நியூஸ். "இந்தியன் -2' படத்தில் ஏற்கெனவே காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்சிங், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் கமிட் ஆகியிருந்தாலும், பிரியா பவானி சங்கருக்கும் படத்தின் முக்கால்வாசி சீன்களில் வரும் வெயிட்டான கேரக்டர் என ஷங்கர் சொன்னதால் சந்தோஷமாக ஒத்துக்கொண்டாராம்.

"இந்தியன் -2' சான்ஸ் கிடைத்த சந்தோஷம் அடங்குவதற்குள் அடுத்த சந்தோஷமும் பிரியா பவானியை முற்றுகையிட ஆரம்பித்துவிட்டது. அது என்னன்னா... அஜய் ஞானமுத்து டைரக்ஷனில் விக்ரம் நடிக்கும் 58-ஆவது படத்திற்கு கமிட் பண்ண பிரியா பவானியிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம். ஐரோப்பா மற்றும் கானா நாடுகளில்தான் பெரும்பகுதி ஷூட்டிங் என்பதால், பாஸ்போர்ட்டை ரெடியாக வைத்திருக்கும்படி சொல்லியுள்ளாராம் அஜய் ஞானமுத்து.

இரண்டே ஆண்டுகளில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டது மட்டுமல்லாமல்; ஹிட் படங்களிலும் நடிக்கும் பிரியா பவானிசங்கரின் சான்ஸ் ரகசியம் குறித்து முன்னணி தயாரிப்பாளர் ஒருவரிடம் கேட்டோம். ""ரகசியம்னா...

அந்த மாதிரி ரகசியம்னு நினைச்சுட்டீங்களா, ச்ச்சீச்சீ... அந்தப் பொண்ணு அப்படி யெல்லாம் இல்லங்க. இப்ப இருக்கும் நடிகைகளில் நன்றாக முகபாவனையை வெளிப்படுத்த தெரிஞ்ச நடிகை. முகபாவனையைக் கொண்டு வரணும்னா நம்ம தமிழ் மொழி தெரிஞ் சிருக்கணும். பிரியா பவானி சங்கர் ஒரிஜினல் தமிழச்சிங்கிறதால், மொழிப் பிரச்சினையும் கிடையாது.

இப்ப சினிமாவுல ரொம்ப முக்கியம் ஹீரோயின்களின் சம்பளப் பிரச்சினைதான். ஒரு படம் ஹிட்டானாலே மேனேஜர்கள், பி.ஆர்.ஓ.க்கள் பேச்சைக் கேட்டுக்கிட்டு சம்பளத்தை எக்குத்தப்பா ஏத்தி தயாரிப்பாளர்களை அலற விடுவார்கள் பல ஹீரோயின்கள். ஆனால் பிரியாவோ மேனேஜர், பி.ஆர்.ஓ. இடைத்தரகு இல்லாமல் சம்பளத்தை நேரடியாகப் பேசுவார். அதிகமான சம்பளத்துக்கும் ஆசைப்படமாட்டார். அதே போல் அவுட்டோர் ஷூட்டிங் கின் போது, "தங்குவதற்கு ஃபைவ் ஸ்டார் ஓட்டல்தான் வேணும்... என் கூட ஆறு பேர் வருவார்கள்... அவர்களுக்கும் ஃபைவ் ஸ்டார் ஓட்டல்தான் வேணும்'னு அடம் பிடிக்க மாட்டார். நல்ல டீசண்டான ஓட்டலா இருந்தா போதும் அவ்வளவுதான். இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினால் பிரியாவுக்கு இருக்கும் திறமைக் கும் அழகிற்கும் இன்னும் பத்து வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் நிலைத்து நின்று புகழ்பெற்ற நடிகையாக மகுடம் சூட்டுவார்'' என பிரியா பவானி சங்கர் குறித்துப் பெருமை பொங்க பேசினார் அந்தத் தயாரிப்பாளர்.

பிரியா பவானி சங்கரின் அபார வளர்ச்சி, அதே "மேயாத மான்' படத்தில் அறிமுகமான இந்துஜாவுக்கு கடுப்பைக் கிளப்பியுள்ளதாம். இந்துஜாவும் வேலூரைச் சேர்ந்த உண்மைத் தமிழச்சிதான். "60 வயது மாநிறம்' படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடி, "பூமராங்' படத்தில் அதர்வாவுக்கு ஜோடி என்றாலும், அந்தப் படங்களின் ரிசல்ட் என்னவோ சுமார். விஜய்யின் "பிகில்', ஆர்யாவின் "மகாமுனி' என கைவசம் படங்கள் இருந்தாலும், இதுவரை பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட முடியாத ஏக்கம் இந்துஜாவை படாதபாடுபடுத்துகிறதாம். இப்போது துருவ் என்ற புதுமுகத்துடன்தான் "சூப்பர் டூப்பர்' படத்தில் ஜோடி போட்டிருக்கிறார்.

பிரியா பவானி சங்கரைப்போல் தானும் லீடிங் ஹீரோயின் ஆவதற்காக சில அதிரடி வேலைகளில் இறங்கத் தயாராகிவிட்டாராம் இந்துஜா. அந்த அதிரடி என்னவா இருக்கும்...

-ஈ.பா. பரமேஷ்வரன்

cine060819
இதையும் படியுங்கள்
Subscribe