னியார் நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளராக நுழைந்து, டி.வி. சீரியல் நடிகையாக வலம்வந்து, இப்போது சினிமாவிலும் கவனிக்கத்தக்க ஹீரோ யின்களுள் ஒருவராக இருக்கிறார் ப்ரியா பவானிசங்கர். இவர் நடித்த "மேயாத மான்' படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தாலும், நல்ல ஹிட் படத்திற்காகக் காத்திருந்தவருக்கு கிடைத்ததுதான் "மான்ஸ்டர்'. இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடி போட்டிருந்தார் ப்ரியா பவானி.

Advertisment

dd

"மான்ஸ்டரி'-ன் ஹிட் புண்ணியத் தாலும் சினிமா சென்டிமென்ட் சமாச் சாரத்தாலும் அடுத்து கார்த்திக் நரேன் டைரக்ஷனில் அருண் விஜய்க்கு ஜோடியாக, "தாராள பிரபு' படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடி யாக, ராதா மோகன் டைரக்ஷனில் "பொம்மை' படத்தில் மீண்டும் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக என செம பிஸி ஆர்ட்டிஸ்டாகிவிட்டார் ப்ரியா பவானி. இதுல என்ன வில்லங்கம் வந்துச்சுனா... இரண்டாவது முறையாக எஸ்.ஜே. சூர்யாவுடன் ப்ரியா பவானி சங்கர் ஜோடி போட்டதும் வதந்தியும் புரளியும் பத்திக்கிட்டு எரிய ஆரம்பிச்சது. அட ஆமாங்க, ""பவானியின் அழகில் எஸ்.ஜே. சூர்யா சொக்கிப் போய்ட்டாரு! பவானியும் சூர்யாவை லவ் பண்றாரு'' என கொளுத்திப் போட்டார்கள்.

""அடப்பாவிகளா! புரளியக் கௌப்பாதீங்கடா... நானும் அந்தப் பொண்ணும் நல்ல நண்பர்கள். சினிமாவுல இன்னும் இன்னும் உயரத்துக்கு வரவேண்டிய திறமையான நடிகை. அதவிட முக்கியம் எனக்கு வயசு 50, அந்தப் பொண்ணுக்கு வயசு 30. எவனோ ஒரு முட்டாப்பய பண்ணுன வேலையால அந்தப் பொண்ணு மனசு என்ன பாடுபட்டிருக்கும்? வதந்தியை ஸ்டாப் பண்ணுங்கடா'' என கோபமாகவும் ஜென்டில்மேனாகவும் ட்விட்டரில் மறுப்புத் தெரிவித்தார் எஸ்.ஜே. சூர்யா.

Advertisment

ff

இப்படியெல்லாம் ஏடாகூடமாக பீதியும் புரளியும் கிளம்புவதைப் பார்த்து மிரண்டுபோன ப்ரியா பவானிசங்கர், தனது அப்பா-

அம்மாவுடன் டீப்பாக டிஸ்கஸ் பண்ணி, சட்டுபுட்டென ஒரு முடிவுக்கு வந்து தனது ஒரிஜினல் லவ்வருடன் இருக்கும் ஃபோட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் போட்டு விட்டார். பவானியின் காதலர் ராஜ் (எ) ராஜேஸ் இப்போது ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்கிறார். ""பத்து ஆண்டுகளுக்குமுன்பு கல்லூரியில் படிக்கும்போது குறைவான கவர்ச் சியும் சுமாரான தோற்றமும் கொண்ட என்னை நீ காதலித்ததில் ஆச்சர்ய மில்லை. ஆனால் இன்றும் நீ என்னுடன் இருக்க விரும்புவதைப் பார்த்து வியக்கிறேன். நட்சத்திரங்கள் நிறைந்த என் வானத்தில் நீ மட்டுமே சூரியன்'' என உருகி உருகி கவிதை எழுதி, ராஜ்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியுள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

இப்போது கையில் இருக்கும் படங்களுடன் மேலும் சில வலுவான கதை உள்ள படங்களில் நடித்து முடித்துவிட்டு, வெகுவிரைவில் ராஜ் என்கிற ராஜேசை திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டார் ப்ரியா பவானி சங்கர்.

காதலர்கள், மணமக்களாகி கருத்தொருமித்த தம்பதிகளாக வாழட்டும்.

-பரமு & மூன்கிங்