Advertisment

பாராட்டு மழையில் பா. இரஞ்சித்!

/idhalgal/cinikkuttu/praise-rain-pa-ranjit

ந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதியம் குறித்து உலக அளவிலான விவாதங்களைத் தொடங்கிவைத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "பரியேறும் பெருமாள்' படம் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக செயல் பாட்டாளர்களுக்காக சென

ந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதியம் குறித்து உலக அளவிலான விவாதங்களைத் தொடங்கிவைத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "பரியேறும் பெருமாள்' படம் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக செயல் பாட்டாளர்களுக்காக சென்னையில் பிரத்யேகமாகத் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.

Advertisment

paranjit

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாக்டர். தொல் திருமாவளவன் மற்றும் வன்னி அரசு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி. மகேந்திரன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் தமிழன் பிரசன்னா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சுப. வீரபாண்டியன், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை. ஜெகன்மூர்த்தி, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை. சத்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு திரைப்படத்தினைப் பார்த்து தயாரிப்பாளர் பா. இரஞ்சித்தையும், இயக்குநர் மாரி செல்வராஜையும் கட்டித் தழுவி, முத்தமிட்டு தனது பாராட்டுகளை வெளிப்படுத்தினார்கள்.

Advertisment

cine161018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe