Advertisment

பிரபுதேவா, துல்கர் சல்மான், விஜய் சேதுபதி மேட்டர்ஸ்

/idhalgal/cinikkuttu/prabhu-deva-tulkar-salman-vijay-sethupathi-matters

prabhudevபிரபுதேவா நடிக்கும் "எங் மங் சங்' படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் நடந்தபோது புரொடக்ஷன் ஆட்கள் இரண்டுபேர் விபத்தில் பலிலியாகினர். சில தோஷ பரிகாரங்கள் செய்தபின் ஷூட்டிங்கை வைத்துக்கொள்வோம் எனச் சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர்.

Advertisment

"நடுவுல கொஞ்சம் ப

prabhudevபிரபுதேவா நடிக்கும் "எங் மங் சங்' படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் நடந்தபோது புரொடக்ஷன் ஆட்கள் இரண்டுபேர் விபத்தில் பலிலியாகினர். சில தோஷ பரிகாரங்கள் செய்தபின் ஷூட்டிங்கை வைத்துக்கொள்வோம் எனச் சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர்.

Advertisment

"நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' டைரக்டர் பாலாஜி தரணிதரன், மம்முட்டி மகன் துல்கர் சல்மானை ஹீரோவாகப் போட்டு எடுத்த "ஒரு பக்க கதை' பாதியிலேயே நிற்கிறதாம்.

Advertisment

முன்பெல்லாம் தனது படங்களின் டைரக்டர்களுடன் ஜாலிலியாக சரக்கடிக்கும் பழக்கம் உள்ள விஜய்சேதுபதி, இப்போது பெரும்பாலும் தனிமையில்தான் இனிமை காண்கிறாராம்.

இதுவும் விஜய்சேதுபதி மேட்டர்தான். ""சூப்பரான கதை, இசைஞானியின் உணர்வுப் பூர்வமான இசை- இதுபோதுமே. "மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தை நானே ரிலீஸ் பண்ணுகிறேன்'' எனச் சொல்லிலி ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனெல்லாம் நடத்தினார் விஜய்சேதுபதி. ஆனால் ஆடியோ ரிலீசாகி எட்டு மாதங்களாகியும் அந்தப் படத்தைப் பற்றி விஜய் சேதுபதி கண்டு கொள்ளவே யில்லை. இதனால் ரொம்பவே தவித்துப் போயிருக்கிறார் "மேற்குத் தொடர்ச்சி மலை'-யின் டைரக்டர் லெனின் பாரதி.

vijaysethupath-trisha

வினய்யை ஹீரோ வாகப் போட்டு டைரக்டர் சரண் எடுத்த "மோதி விளையாடு' ஊத்தல் படமானது. ஆனா லும் அசராத சரண், மீண்டும் வினய்யை ஹீரோவாகப் போட்டு ஒரு படத்தை எடுத்து முடித்து ரொம்ப நாளாகியும் யாரும் வாங்கவில்லை.

வினய்யை வைத்து படம் எடுத்து தனக்குத் தானே வினையைத் தேடிக்கொள்கிறார் சரண் என்கிறார்கள், சரணின் நண்பர்கள்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe