யக்குநர் பா. இரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் படம் "பரியேறும் பெருமாள்'. இயக்குநர் ராம்-ன் இணை இயக்குநரான மாரி செல்வராஜ், இப்படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

Advertisment

anandhi

"தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்' என்ற சிறுகதை தொகுப்பின் மூலமாகவும் "மறக்கவே நினைக்கி றேன்' தொடரின் மூலமாகவும் இலக்கிய உலகத்திலும் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரான மாரி செல்வராஜ் இயக்கும் முதல் திரைப்படம் "பரியேறும் பெருமாள்.'

""முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலிலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் தென் தமிழக கிராமங்களிலும் நகரங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் நுணுக்கமாக பரவிக்கொண்டிருக்கும் சாதிப் பிரிவினை படிநிலைகளையும் அது உருவாக்கும் பெரும் தாக்கத் தையும் பற்றி உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. காதலையும் வாழ்வியலையும் அதனைச் சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாகப் "பரியேறும் பெருமாள்' இருக்கும். என்கிறது படக்குழு.

Advertisment

பரியேறும் பெருமாளாக சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடிக்க அவருடன் "கயல்' ஆனந்தி, யோகிபாபு, லிஜீஷ், மாரிமுத்து தவிர திருநெல்வேலிலி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களையே பெரும்பான்மையான கதாபாத்திரங் களில் நடிக்க வைத்துள்ளனர்.