Advertisment

அரசியல் சதி -கபிலன் வைரமுத்து

/idhalgal/cinikkuttu/political-conspiracy-kabilan-vairamuthu

டிவிஎம் சேவா பாலம் அமைப்பின் சார்பில் சிறந்த சமூகப் பணிகளுக்கான விருதுவழங்கும் விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமலதா மற்றும் அயர்லாந்து தூதர் ராஜீவ் மேச்சேரி கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்கள். தமிழகத்தில் நிலவும் மதுக்கலாச் சாரத்திற்கு எதிராக தனிப்பாடல் இயற்றிய கபிலன் வைரம

டிவிஎம் சேவா பாலம் அமைப்பின் சார்பில் சிறந்த சமூகப் பணிகளுக்கான விருதுவழங்கும் விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமலதா மற்றும் அயர்லாந்து தூதர் ராஜீவ் மேச்சேரி கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்கள். தமிழகத்தில் நிலவும் மதுக்கலாச் சாரத்திற்கு எதிராக தனிப்பாடல் இயற்றிய கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது வழங்கப்பட்டது. விழாவில் கபிலன் வைரமுத்து பேசியதாவது:

Advertisment

kabilanvairamuthu

கபிலன் வைரமுத்து விருது பெற்றபோது

""பொது வாழ்க்கையில் ஈடுபடுகிறவர்களைப் பரிதாபமாகப் பார்க்கக்கூடிய நம் சமூகத்தில் அந்த மூடப் பார்வையை மோதி மிதித்துவிட்டு கடந்த 20 ஆண்டுகளாக சேவை செய்து கொண்டிருக்கிறது பாலம் அமைப்பு.

kabilanvairamuthuகளத்தில் இறங்கி சேவை செய்பவர்களின் கரத்தில் இருந்து வரும் விருதைப் பெருமையாக நினைக்கிறேன். தமிழ்நாட்டில் மதுவினால் நிறைய சீரழிவுகளைப் பார்க்கிறோம். மதுப்பழக்குக் கலாச்சாரம் ஒன்று உருவாகிவருகிறது. எதிர்காலத்தில் பாடப்புத்தகங்களோடு இலவச இணைப்பாக மது கொடுக்கப்படுமோ என அஞ்சுகிறோம்.

Advertisment

இந்த அச்சத்தின் அடிப்படையில் உருவான பாடல்தான் "ஏந்திரு அஞ்சலி ஏந்திரு.' மதுவுக்கு எதிரான பாடல் அரசுக்கு எதிரான பாடலாகப் பார்க்கப்பட்டதால் இந்தப் பாடலைப் உருவாக்கி வெளியிடுவதில் நிறைய சிரமங்கள் இருந்தன. இந்தப் பயணத்தில் நிறைய படிப்பினைகள். மதுக்கடைகளை மூடச்சொல்லி பேசினால் மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் என யாரோ தந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் வரவிருக்கிற பொதுத்தேர் தலின் பிரச்சார மேடைகளில் மதுவுக்குஎதிராகப் பேசக்கூடாது என சில அரசியல் கட்சிகள் முடிவெடுத்திருப்பதாகக் கேள்விப் படுகிறோம்'' என்ற பரபரப்பைப் பற்ற வைத்தார்.

'பாலம்' அமைப்பின் நிறுவனர் இருளப்பன் மற்றும் இளைஞர் அணிச் செயலாளர் மாரிமுத்து விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

cine231018
இதையும் படியுங்கள்
Subscribe